அமெரிக்க அதிபர் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் வர்ற நாட்களில் நேருக்கு நேர் சந்திச்சு பேசப் போறாங்கன்னு கிரெம்ளின் அறிவிச்சிருக்கு. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் மூணு வருஷத்துக்கு மேல நீடிச்சு வர்ற நிலையில, இந்த சந்திப்பு உலக அரங்கத்துல பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கு. ட்ரம்ப், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர தீவிரமா முயற்சி பண்ணிட்டு இருக்கார்.
ஆனா, ரஷ்யா இன்னும் இறங்கி வராததால, ட்ரம்ப் ரஷ்யாவுக்கு எதிரா புது பொருளாதார தடைகளை விதிக்கப் போறேன்னு அச்சுறுத்தியிருக்கார். இந்தியாவோட ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிச்ச மாதிரி, இப்போ ரஷ்யாவுக்கும் கெடு விதிச்சு, ஆகஸ்ட் 8, 2025 (இன்னிக்கு) வரைக்கும் கால அவகாசம் கொடுத்திருக்கார்.
இந்த சூழல்ல, ட்ரம்போட சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகஸ்ட் 6-ல மாஸ்கோவுக்கு போயி, புதினை சந்திச்சு மூணு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கார். இந்த பேச்சு “பயனுள்ளதா, ஆக்கப்பூர்வமா” இருந்ததா கிரெம்ளின் சொல்லுது. இதைத் தொடர்ந்து, ட்ரம்பும் புதினும் நேரடியா சந்திக்க முடிவு செஞ்சிருக்காங்க.
இதையும் படிங்க: இந்தியாவை மட்டும் டார்கெட் செய்வது ஏன்? இன்னும் நிறையா பாக்கப்போறீங்க! ட்ரம்ப் வார்னிங்..
இந்த சந்திப்பு அடுத்த வாரம், ஒருவேளை ஐக்கிய அரபு அமீரகத்துல (UAE) நடக்கலாம்னு புதின் சொல்லியிருக்கார். UAE அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானை கிரெம்ளின்ல சந்திச்ச பிறகு, “UAE இந்த சந்திப்புக்கு மிகப் பொருத்தமான இடம்”னு புதின் அறிவிச்சிருக்கார். இந்த சந்திப்பு யார் முன்னெடுத்து ஏற்பாடு செஞ்சாங்கன்னு கேட்டதுக்கு, “அது முக்கியமில்லை, இரு தரப்பும் ஆர்வம் காட்டுச்சு”ன்னு புதின் சொல்லியிருக்கார்.

ஆனா, இந்த சந்திப்புல உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பங்கேற்பாரான்னு கேட்டதுக்கு, புதின் தெளிவா பதில் சொல்லல. “நான் ஜெலன்ஸ்கியை சந்திக்க எதிரியில்லை, ஆனா அதுக்கு சில நிபந்தனைகள் இருக்கு”ன்னு மட்டும் சொல்லியிருக்கார். இதுக்கு முன்னாடி, ட்ரம்ப் ஒரு முத்தரப்பு சந்திப்பு, அதாவது தானும், புதினும், ஜெலன்ஸ்கியும் சேர்ந்து பேசலாம்னு சொல்லியிருந்தார்.
ஆனா, இப்போ “புதின் ஜெலன்ஸ்கியை சந்திக்க வேண்டிய அவசியமில்லை”ன்னு ட்ரம்ப் சொல்லியிருக்கார், இது உக்ரைனுக்கு பெரிய அதிர்ச்சியா இருக்கு. ஜெலன்ஸ்கி, “எங்களை ஒதுக்கி வச்சுட்டு அமெரிக்காவும் ரஷ்யாவும் பேசினா, எங்களுக்கு நியாயம் கிடைக்காது”ன்னு கவலைப்படுறார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னாடி, விட்காஃப் இதுவரை நாலு தடவை மாஸ்கோ போயி புதினை சந்திச்சு பேசியிருக்கார், ஆனா பெரிய முன்னேற்றம் இல்லை. ட்ரம்ப், “இந்த போர்ல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இறக்குறாங்க, இதை முடிவுக்கு கொண்டு வரணும்”னு சொல்லி, புதினுக்கு எதிரா கடுமையான பேச்சையும் வைச்சிருக்கார். இந்த சந்திப்பு UAE-ல நடந்தா, அது 2021-ல பைடனும் புதினும் ஜெனீவாவுல சந்திச்சதுக்கு பிறகு, ஒரு அமெரிக்க-ரஷ்ய அதிபர்களோட முதல் நேரடி சந்திப்பா இருக்கும்.
இந்த சந்திப்பு உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருமா? ட்ரம்போட இரண்டாவது டேர்ம் ஆரம்பிச்ச பிறகு, இந்த முதல் பெரிய முயற்சி உலக அரங்கத்துல பரபரப்பை கிளப்பியிருக்கு. ஆனா, புதின் இன்னும் முழு அமைதி ஒப்பந்தத்துக்கு இறங்கி வரல. “ரஷ்யாவோட நிபந்தனைகளை உக்ரைன் ஏத்துக்கணும்”னு புதின் உறுதியா இருக்கார். இந்த சந்திப்பு ஒரு திருப்புமுனையை உருவாக்குமா? இல்ல இன்னும் சிக்கலை அதிகரிக்குமானு? எதிர்பார்ப்பு எகிறிருக்கு!!
இதையும் படிங்க: விரைவில் முடியும் கெடு!! உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தமா? புதினுடன் ட்ரம்ப் தூதர் சந்திப்பு!!