தமிழ்நாடு அரசு, கிராம ஊராட்சிகளில் வணிக தொழில்களை ஒழுங்குபடுத்துவதற்காக, தொழில் உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறை, அரசிதழில் வெளியிடப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில், கிராமப்புறங்களில் தொழில் செய்பவர்கள், குறிப்பாக சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தேநீர் கடைகள், உணவகங்கள், மற்றும் பிற வணிக நிறுவனங்கள் வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் இட்லிக்கடை, தேநீர்க்கடை உள்ளிட்ட 48 வகையான உற்பத்தித் தொழில்கள் செய்வதற்கும், தையல் தொழில், சலவைக்கடைகள் போன்ற 119 வகையான சேவைத் தொழில் செய்வதற்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருப்பது கிராமப்புற பொருளாதாரத்தையும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை என கூறி தமிழக அரசை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதிக வருவாயும், இலாபமும் தரக்கூடிய கடைகளுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்குவதில் தவறு இல்லை. ஆனால், வாழ்வாதாரத்திற்காக செய்யப்படும் தொழில், வணிகத்திற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: அட்டைப்பெட்டியில் கொண்டு போக வாய்ப்பே இல்லை..! குரூப் 4 சர்ச்சைக்கு DOT வைத்த TNPSC..!
இந்த நிலையில் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று சிறு குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. பஞ்சாயத்து பகுதிகளில் கடைகள் நடத்த உரிமம் பெறுவதில் சிக்கல் நிலவுவதாக வணிகர்கள் மனு அளித்திருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மன்னிச்சிடுங்க.. நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச் செயலாளர்..! வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்..!