இந்தியப் படைகளின் 'ஆபரேஷன் சிந்துர்' தாக்குதலிலிருந்து மீள முயற்சிக்கும் ஜெய்ஷ்-இ-முகமது, பாதுகாப்பு அமைப்புகளுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும் ஒரு உத்தியை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மசூத் அசார் தலைமையிலான அமைப்பு அதன் வரலாற்றில் முதல் முறையாக 'ஜமாத்-உல்-மோமினாத்' என்ற மகளிர் படைப்பிரிவை உருவாக்குகிறது. இந்தப் பிரிவு மசூத் அசாரின் சகோதரி சாதியா அசார் தலைமையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பெண்கள் படையணி: பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆபரேஷன் சிந்தூர் காரணமாக எதிர்பாராத இழப்பை சந்தித்துள்ளது. இப்போது, அதன் இருப்பை மீண்டும் உறுதிப்படுத்த ஒரு புதிய உத்தியை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மசூத் அசார் தலைமையிலான அமைப்பு அதன் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண்கள் பிரிவை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. முன்னர் ஆயுதம் ஏந்திய மற்றும் போர் நடவடிக்கைகளில் பெண்கள் பங்கேற்பதை தடை செய்த ஜெய்ஷ், இப்போது ஒரு மூலோபாய மாற்றத்தை அறிவித்துள்ளது. புதன்கிழமை "ஜமாத்-உல்-மோமினாத்" என்ற பெயரில் இந்த பெண்கள் பிரிவை உருவாக்குவதாக அறிவித்தது. இதற்கான ஆட்சேர்ப்பு பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் உஸ்மான்-ஓ-அலி மையத்தில் தொடங்கியது.
ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜெய்ஷ் தலைமையகத்தை இந்தியப் படைகள் குறிவைத்தன என்பது அனைவரும் அறிந்ததே. இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ் பெரும் இழப்பைச் சந்தித்தது . ஜெய்ஷ் தனது இருப்பை மீண்டும் உறுதிப்படுத்த ஒரு மகளிர் படைப்பிரிவைத் தொடங்க உள்ளது. இந்தப் பெண்கள் பிரிவுக்கு ஐ.நா.வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசாரின் சகோதரி சாதியா அசார் தலைமை தாங்குவார். ஆபரேஷன் சிந்துவின் போது மர்காஸ் சுபனல்லாவில் உள்ள ஜெய்ஷ் தலைமையகம் மீது இந்தியப் படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட யூசுப் அசாரின் மனைவி தான் இந்த சாதியா அசார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லி TO மதுரை... திமுக அரசுக்கு சம்மட்டி அடி! பந்தாடிய அண்ணாமலை...!
பயங்கரவாதக் குழு தனது தளபதிகளின் மனைவிகளையும், பஹாவல்பூர், கராச்சி, முசாபராபாத், கோட்லி, ஹரிபூர் மற்றும் மன்சேரா ஆகிய இடங்களில் உள்ள அதன் மையங்களில் படிக்கும் பொருளாதார ரீதியாக பலவீனமான பெண்களையும் சேர்க்கத் தொடங்கியுள்ளது. பொதுவாக, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) போன்ற அமைப்புகள் பெண்களை போர் நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கின்றன.
ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ், போகோ ஹராம், ஹமாஸ் மற்றும் எல்.டி.டி.இ போன்ற பிற பயங்கரவாதக் குழுக்கள் பெண்களை தற்கொலை குண்டுதாரிகளாகப் பயன்படுத்திய வரலாற்றைக் கொண்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பு எதிர்கால பயங்கரவாத நடவடிக்கைகளில் பெண் தற்கொலை குண்டுதாரிகளையும் பயன்படுத்த முயற்சிப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன. மசூத் அசார் மற்றும் அவரது சகோதரர் தல்ஹா அல்-சைஃப் கூட்டாக இந்த முடிவை அங்கீகரித்ததாகவும், இதன் விளைவாக ஒரு சிறப்பு மகளிர் படை உருவாக்கப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் இந்த "ஜமாத்-உல்-மோமினத்" கிளையை ஆன்லைன் நெட்வொர்க்குகள் மூலம் விரிவுபடுத்த ஜெய்ஷ் இலக்கு வைத்துள்ளதாகத் தெரிகிறது. பல்வேறு சமூக ஊடக தளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் அவர்களின் செயல்பாடுகள் விரிவடைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த படைப்பிரிவு மதத்தின் பெயரால் பெண்களை ஈர்த்து பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களைப் பயன்படுத்த முயற்சிக்கிறது. இதை அறிந்த பிறகு, இந்திய அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மதுரையை உலுக்கிய சம்பவம்! விசாரணைக்குச் சென்ற இளைஞர் பலி... காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்...!