வடகிழக்கு பருவமழை, இந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களையும், இலங்கை, மாலத்தீவுகள் போன்ற அருகிலுள்ள பகுதிகளையும் ஒருங்கிணைத்த முக்கியமான பருவநிலைக் காலம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வடகிழக்கு பருவமழை மாநிலத்தின் ஆண்டு மழையளவில் சுமார் 48% முதல் 50% வரை பங்களிக்கிறது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற கடலோர மாவட்டங்கள் இந்த மழையால் அதிகம் பயனடைகின்றன. இருப்பினும், இந்த மழை சில நேரங்களில் புயல்கள் மற்றும் வெள்ளப் பெருக்குகளை ஏற்படுத்தி பெரும் சேதத்தையும் உண்டாக்குகிறது. 
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வடகிழக்கு பருவ மழையை பொறுத்தவரை 87 சதவீதம் மழைப்பொழிவு இருக்கும் என்றும் தற்போது பெய்த மழை 26 சதவீதத்தை எட்டியுள்ளது என்று தெரிவித்தார்.

மழைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும், பயமில்லை, பதட்டமில்லை, தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறினார். திமுக அரசு அமைந்ததில் இருந்து டெங்கு பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தார். 2012 ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பால் 66 பேர் உயிரிழந்ததாகவும், 2017 ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பால் 65 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்காதீங்க... மா. சு. எச்சரிக்கை...!
திமுக அரசு அமைந்தத்தில் இருந்து இறப்பு எண்ணிக்கை என்பது ஒற்றை இலக்கத்தில் இருப்பதாக கூறினார். ஒரு இறப்புக்கூட இருக்கக் கூடாது என்பது அரசின் விருப்பம் என்றும் இருப்பினும் நோயின் தாக்கம் காரணமாக அவ்வபோது உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார். 
இதையும் படிங்க: SIR ஜனநாயக படுகொலை... பாத்துட்டு சும்மா இருக்க முடியாது...! முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!