திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடமாடும் மருத்துவ ஊர்திகள் சேவையைக் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 40 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புற்றுநோய் தடுப்பு பராமரிப்பு திட்டத்தில் நடமாடும் மருத்துவ ஊர்திகள் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் நலனுக்காக 40 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். டிஜிட்டல் மேம்மோகிராபி, இசிஜி, செமி ஆட்டோ அனலைசர் ஒரு லிட்டர் பல வசதிகளுடன் நடமாடும் மருத்துவ ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்திகலை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து திருப்பத்தூர், நாமக்கல், மயிலாடுதுறை உள்ளிட்ட 12 இடங்களில் 62 கோடி ரூபாயில் தோழி விடுதிகள் அமைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும், விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், குமரி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் தோழி விடுதிகள் அமைய உள்ளன.
இதையும் படிங்க: எல்லோர் மனசுலையும் தாமரை மலரனும்... என்னயா நடக்குது? கோவில் குருக்கள் பேச்சுக்கு கண்டனம்...!
முக்கிய நகரங்களில் பணியாற்றும் மகளிர் பயன்பெறும் வகையில் 12 இடங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்படுகிறது. தொடர்ந்து திருச்சி மற்றும் கோவையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லங்களுக்கு 27.90 கோடி ரூபாயில் புதிய கட்டடங்கள் கட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் சென்னை ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் SIR பணிகள்... தேர்தல் ஆணையத்தின் புதிய அப்டேட்...!