2023ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆணைக்குப் பிறகு மாவீரன் பொல்லான் அரங்கம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டன. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டத்தின் ஜெயராம்புரம் என்ற இடத்தில், இந்த அரங்கத்தின் அமைப்புப் பணிகள் தொடங்கின. 2023 பிப்ரவரியில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இந்த இடத்தைப் பார்வையிட்டு, பணிகளைத் துரிதப்படுத்தினார்.மாவீரன் பொல்லான் அரங்கம், ரூபாய் 490 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
மாவீரன் பொல்லான் அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து மாவீரன் பள்ளானின் திருவுருவச் சிலையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் மாவீரன் பொல்லான் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த பின்னர் உரையாற்றினார். அப்போது, மாவீரன் பொல்லான் சிலையை திறந்து வைத்ததில் பெருமையும் வீரமும் அடைகிறேன் என்று தெரிவித்தார்.

சொன்னால் சொன்னதை செய்பவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொன்னால் சொன்னதை செய்வேன் என்பதற்கு பொல்லான் சிலை தான் சாட்சி எனவும் கூறினார். தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக இருந்தவர் மாவீரன் பொல்லான் என்று தெரிவித்தார். அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டு சட்டம், மக்களுக்கு ஒளிவிளக்காக திகழ்வதாகவும் அருந்ததியினரில் 3,944 மாணவர்கள் பொறியியலும், 193 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பும் படிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வரலாற்றின் அத்தியாயம்... மாவீரன் பொல்லான் அரங்கத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்...!
அருந்ததியினர் மக்களுக்கு தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது என்றும் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கரூரில் அருந்ததியின மாணவர்களுக்கு 26 விடுதிகள் கட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தன் சார்பில் அருந்ததியினர் மசோதாவை அறிமுகப்படுத்த கலைஞர் கேட்டுக் கொண்டதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பில் தன்னுடைய பங்கு இருந்ததை எண்ணி பெருமையடைவதாக தெரிவித்தார். தி.மு.க. அரசின் சட்டம் எப்போதும் வெற்றியை பெறுவது தான் வரலாறு என பாராட்டு கிடைத்துள்ளது என்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் உண்மையான வளர்ச்சி என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு விரோதி ஸ்டாலின்… இப்படிப்பட்ட முதல்வரை பார்த்ததே இல்ல… விளாசிய இபிஎஸ்…!