சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நிரந்தர டிஜிபி நியமனம் செய்யப்படாத நிகழ்வு குறித்து விமர்சித்தார். டிஜிபி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே அடுத்த டிஜிபி குறித்து முடிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சி காலத்தில் டிஜிபி நியமனம் முறையாக நடைபெற்றது என எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். நிரந்தர டிஜிபியை நியமிக்க முடியாமல் திமுக அரசு தடுமாறுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னரே டிஜிபி தேர்வு பட்டியலை தமிழக அரசு தயாரித்ததாகவும் தெரிவித்தார். பட்டியலில் உள்ள மூன்று பேரும் கைப்பாவையாக செயல்பட மாட்டார்கள் என்பதால்தான் திமுக அரசு தடுமாற்றம் அடைந்துள்ளது என்று விளக்கம் அளித்தார். இன்னும் டிஜிபி நியமனம் செய்யப்படாததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு இருப்பதாக தெரிவித்தார். திமுக அரசின் அலட்சியத்தால் தான் விவசாயிகளுக்கு துயரம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அறுவடைக்குப் பின்னர் நெல்- ஐ உடனடியாக கொள்முதல் செய்து இருந்தால் பிரச்சனை வந்து இருக்காது என்றும் விளக்கமளித்தார்.

நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான அளவுக்கு லாரிகள் எடை போடும் நபர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் கொள்முதல் செய்த நெல்லை திருப்பி அனுப்புவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். மதுரை சோழவந்தான் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் லாரிகள் வராததால் நெல் மூட்டைகள் தேக்கமடைந்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டு பேசினார். நானும் டெல்டாக்காரன் என வீர வசனம் பேசி முதலமைச்சர் தண்ணீரை திறந்து விட்டதாகவும், ஆனால் நெல் விளைச்சலுக்கு வருகின்ற 20 நாட்களுக்கு முன்பாக தண்ணீர் இல்லாமல் குருவை சாகுபடி செய்த நெற்பயிர்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார். முதலமைச்சர் விவசாயிகளை பார்க்க செல்லாமல் திரைப்படம் பார்க்க சென்று விட்டதாகவும் இப்படிப்பட்ட முதலமைச்சரை இங்கேயும் பார்த்ததில்லை என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: போராட விட்டுட்டீங்களே! நீலி கண்ணீர் வடித்த பச்சை துரோகிகள் எங்கே? இபிஎஸ்- ஐ புரட்டி எடுத்த முதல்வர்...!
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் குறித்து தெரியுமா என முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பினார். மூன்று வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பதால் ஆதரித்ததாக குறிப்பிட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் தான் விவசாயிகளுக்கு விரோதி என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீர்கெட்டு போன திருப்பூர் மாநகராட்சி... அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்... இபிஎஸ் அறிவிப்பு...!