இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் 100% இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் அச்சுறுத்தியுள்ளார். உக்ரைனுடன் தீவிர அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி புடினுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அவர் மூன்று நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார்.
"இந்த மூன்று நாடுகளுக்கும் இந்த அறிவிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இது ஏனெனில் இது உங்களை மிகவும் கடுமையாக பாதிக்கலாம். எனவே தயவுசெய்து விளாடிமிர் புடினுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, அவர் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள், இல்லையெனில் இது பிரேசில், இந்தியா மற்றும் சீனா மீது மிகப்பெரிய அளவில் தாக்குதலை ஏற்படுத்தும்" என்று ரூட் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. ராணுவ ஒத்துழைப்புக்கான, நேட்டோ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போர் துவங்கியது. இந்த அமைப்பில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்!! இந்தியாவுக்கு நேட்டோ வார்னிங்! புடினால் வந்த வினை!!
இதையடுத்து, ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடையை விதித்தன. ஆனால் இதை மீறி, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்கி வருகின்றன.
இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதிபராக பதவியேற்ற ஜனவரியிலிருந்து தற்போது வரை இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த பேச்சுக்கள் சில சமயங்களில் ஒரு மணிநேரத்திற்கு மேல் நீண்டுள்ளன.
ஆனாலும் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா குறைக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உக்ரைனும் வலுவான பதிலடி தந்து வருகிறது. புதின் உடனான பேச்சு பலனளிக்காததால் சமீபத்தில் கோபமடைந்த டிரம்ப், 'காலையில் இனிக்க இனிக்க பேசும் அதிபர் புடின், இரவில் உக்ரைன் மீது குண்டு வீசுகிறார். போரை நிறுத்த ரஷ்யாவுக்கு 50 நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் அமைதி பேச்சுக்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில், 100 சதவீத வரி விதிக்கப்படும்' என எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?