இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என புதிய போப் லியோ தெரிவித்தார்.அண்மையில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரீவோஸ்ட் உலக கத்தோலிக்க திருச்சபையின் 267ஆவது போப்பாகத் தேர்வு செய்யப்பட்டார். 14ஆம் போப் லியோ என்றழைக்கப்படும் புதிய போப், பொறுப்பேற்று கொண்ட பின்னர் முதல் ஞாயிற்று கிழமையான இன்று வாடிகனில் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

"உக்ரைன் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். அங்கு விரைவில் அமைதி ஏற்பட வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். முதலில் அங்கு அனைத்து பிணை கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: போர் நிறுத்தத்துக்கு பிறகும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பிளாக் அவுட் உத்தரவு.. மீண்டும் பீதியில் மக்கள்.!

காசா பகுதியில் நடக்கும் சம்பவங்களால் நான் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் வரவிருக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் விரைவில் ஒரு நல்ல ஒப்பந்தம் எட்டப்படும் என்று நம்புகிறேன். உலகில், அமைதிக்கான அற்புதம் ஏற்படுவதற்கு கடவுள் ஆசி வழங்கும்படி நான் வேண்டி கொள்கிறேன்" என்று போப் லியோ பேசினார்.
இதையும் படிங்க: பிரம்மோஸ் ஏவுகணை அடி எப்படி இருக்கும்.? பாகிஸ்தானிடம் கேளுங்கள்.. யோகி ஆதித்யநாத் தெறி பேச்சு!