வங்கக்கடலில் உருவான மோந்தா புயல் தீவிர புயலாக உருமாறி ஆந்திர மாநிலத்தின் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே நரசிபுரா என்ற ஊரின் அருகே கரையை கடந்திருக்கிறது. இந்த நிலையில் கரையை கடந்த பின்பும் புயல் சின்னத்துடைய பின்பகுதி முழுமையாக கடந்து முடிக்க ஒன்றிலிருந்து 2 மணி நேரம் ஆகும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆந்திர மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலோர பகுதியை ஒட்டிருக்கக்கூடிய ஏழு மாவட்டங்களில் இதனால் பெரும் மழை என்பதை தாண்டி சூறாவளி காற்றுடன் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்திருக்கிறது.
இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்த சம்பவம் அரங்கேறி, அங்கு மீட்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டன. புயல் கரையை கடந்து செல்வதால் ஆந்திர மாநிலத்தின் வடப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் அதிகன மழை பெய்தது.

தற்போதைய சூழலில் ஒரு மிகப்பெரிய பிரளயத்தை போல 100 கிலோ மீட்டர் முதல் 110 கிலோம் மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் வீசியபடி இந்த புயலானது கரையை கடந்திருக்கிறது. மோந்தா புயல் ஆந்திர மாநிலத்தை உலுக்கி போட்டிருக்கிறது. தற்போது மோந்தா புயலானது வலுவழந்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பகல் 12 மணிக்கே கடையெல்லாம் மூடுங்க.. புதுவை அரசு அதிரடி உத்தரவு
இதனிடையே பருவமழை காலங்களில் புயல் கரையை கடந்ததும் ஒரு சிறிய இடைவெளி ஏற்படும். அதன்படி இரண்டு வாரங்களுக்கு பருவமழையில் தாக்கம் குறைந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. பருவ மழை தீவிரமடைவதற்கு இன்னும் இரண்டு வார காலம் ஆகும் என்றும் அதற்குள் மழை தீவிரம் குறைந்து இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெப்பம் அதிகரித்து வெப்பச்சலன மழையாகவோ அல்லது இரவு நேரத்தில் மிதமான மழையாகவோ பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிரம்பும் அணைகள்... கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்... எச்சரிக்கை..!