காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து 15 பிரமோஸ் ஏவுகணை மற்றும் வேறு சில ஏவுகணைகளை இந்தியா வீசியது.
இதையும் படிங்க: வீரியமெடுக்கும் கொரோனா.. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது..!

இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களை ஊடுருவிக்கொண்டு, நூர் கான், ரபிக்கி, முரிட், ரஹீம் யார் கான், சுனியான், சுக்கூர் விமானப்படை தளங்கள் உட்பட 11 ராணுவ தளங்களை தகர்த்தது. ரன்வே, போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடம், ட்ரோன் ஏவுதளம், கட்டுப்பாட்டு அறைகளை குறி வைத்து இந்த அட்டாக் நடந்தது.இந்தியாவின் இந்த அடியில் தான் பாகிஸ்தானுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது பாகிஸ்தான்.

சண்டையை நிறுத்தக்கோரி பாகிஸ்தான் கெஞ்சியதை அடுத்து, இந்தியா சண்டை நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டது. ஆனாலும் சிந்து நதிநீரை இந்தியா தற்போதும் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நமது நாட்டு வெளியுறவு செயலர், அதிகாரிகள், ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் தினசரி நிருபர்களை சந்தித்து பேட்டி கொடுத்தனர். தாக்குதல் குறித்தும், பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் விவரித்தனர். இந்தியா தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்த செயற்கைக்கோள் படங்களும் வெளியாகின.

இந்நிலையில் பாகிஸ்தான் தாக்குதல் குறித்து அந்நாட்டில் ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. அதில், தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் கூறிய இடங்களை விட கூடுதலாக 7 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. பெஷாவர், ஜங், சிந்தில் உள்ள ஹைதராபாத், பாகிஸ்தானின் பஞ்சாப், பவல்நகர், அடோக் மற்றும் சோக் ஆகிய இடங்கள் சேதம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்திய ராணுவத்தினர் அளித்த பேட்டியில் இந்த இடங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. தற்போது பாகிஸ்தான் வெளியிட்ட ஆதாரங்கள் மூலம், அங்கு இந்தியா குறிப்பிட்டதை விட அதிக இடங்களில் தாக்குதல் நடத்தியதால் தான், போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 6 ஆண்டுகளில் முதன்முறை.. G7 மாநாட்டை புறக்கணிக்கும் மோடி.. கனடாவில் காத்திருக்கும் ஆபத்து..!