வியாழன் இரவு விடிய விடிய இந்தியப் பாதுகாப்புப் படைகள் பாகிஸ்தான் மீது தாக்குதலை தொடர்ந்த நிலையில், இன்னொரு பக்கம் பலுசிஸ்தான் போராளிகளும் பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
'ஆபரேஷன் சிந்தூர்' என்கிற பெயரில் இந்திய ராணுவம் புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தானில் இறங்கி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறி வைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தத் தாக்குதலை இந்தியா நடத்தியது.

இந்திய ராணுவத்தின் தீவிரவாதிகளின் தாக்குதலைப் பொறுத்துக் கொள்ளாத பாகிஸ்தான் இந்தியாவுக்குப் பதிலடி தர முயன்று வருகிறது. ஏற்கனவே புதன் இரவில் இந்தியாவின் 15 நகரங்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்றது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது. இந்தியப் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தான் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது.

இதற்கிடையே வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதலை ஆரம்பித்தது. காஷ்மீர் உட்பட எல்லையோரப் பகுதிகளைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால், அதையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா தக்கப் பதிலடி தந்தது. முதலில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இந்தியா தாக்குதலை நடத்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் பாகிஸ்தானின் கராச்சி, இஸ்லாமாபாத் மீதும் இந்தியா தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி அடுத்தடுத்து நடக்கும் தாக்குதல்களால் பாகிஸ்தான் அச்சத்தில் ஆழ்ந்து இருக்கிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு இந்தியா மரண அடி.. விடிய விடிய பாகிஸ்தான் நகரங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.!

இது ஒரு பக்கம் இருக்க பலுசிஸ்தானிலும் பாகிஸ்தான் அடிபடத் தொடங்கியிருக்கிறது. பாகிஸ்தானின் பெரிய மாநிலமான பலுசிஸ்தானில் போராளிகள் தனி நாடு கோரிப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். இருப்பினும், அதை ஏற்காமல் பாகிஸ்தான் அங்கு ராணுவத்தைக் குவித்து அடக்குமுறையை கையாண்டு வருகிறது. ஏற்கனவே இந்தியாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு மற்றொரு அடியாக பலுசிஸ்தான் விடுதலை போராளிகளும் பாகிஸ்தான் ராணுவம் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. குறிப்பாக குவெட்டா என்ற பகுதியில் ராணுவத்தை நோக்கித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் அங்கிருந்தும் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பிறந்த பெண் குழந்தைக்கு தேசப்பக்தியால் சிந்தூரி பெயர்.. பீகார் தம்பதிக்கு குவியும் பாராட்டு