காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர்.

இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது, பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வந்தால் என்ன நடக்கும்.? அல்லாவுக்குதான் தெரியும்.. ஃபரூக் அப்துல்லா ஆதங்கம்!

மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியா எப்போது பதிலடி கொடுக்குமோ என்று தெரியாமல் அச்சத்தில் இருக்கும் பாகிஸ்தான், தினசரி ஏதாவது ஒன்றைச் செய்து வருகிறது.

இதற்கிடையே இப்போது மாதம் முழுக்க கராச்சி மற்றும் லாகூர் விமான மண்டலங்களின் குறிப்பிட்ட பகுதிகளை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதாவது மே மாதம் முழுவதும் தினசரி கராச்சி மற்றும் லாகூர் விமான மண்டலங்களின் குறிப்பிட்ட பகுதிகளைக் குறிப்பிட்ட நாட்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் பதிலடியை நினைத்துப் பயந்து போய் கிடக்கும் பாகிஸ்தான் தினசரி இதுபோல ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

இது தொடர்பாக அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், மே 1 முதல் மே 31 வரை உள்ளூர் நேரப்படி தினமும் அதிகாலை 4:00 மணி முதல் காலை 8:00 மணி வரை குறிப்பிட்ட வான்வெளி மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வான்வெளியின் குறிப்பிட்ட பகுதியைத் தினசரி மூடுவதால் விமானச் சேவை எதுவும் பாதிக்கப்படாது என்றும் தடைசெய்யப்பட்ட நேரங்களில் விமானங்கள் வேறு பாதை வழியாகத் திருப்பி விடப்படும் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சும்மா விட மாட்டோம்; வேரோடு அழிப்போம்... பயங்கரவாதிகளுக்கு பீதியை கொடுத்த அமித்ஷா!!