ஆடு தானே வந்து தலையை கொடுத்தது போல அமைதியான சூழ்நிலையில் இருந்த காஷ்மீரில் மீண்டும் நேற்று இரவு தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் அத்துமீறியது. பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் வெறி ஏறிய இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது. ட்ரோன்களை தரையில் இறங்க விடாமல் வான்வெளியிலேயே அடித்து நொறுக்கியது. இதைப் பார்த்து ஐயோ என பாகிஸ்தான் தலையில் கை வைத்து அமர்ந்திருக்கும் நேரம், பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத்தை சூறையாடத் தொடங்கியது

இந்தியா. லாகூர், கராச்சி உட்பட பல்வேறு இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானை இந்தியா பந்தாடியதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பாகிஸ்தான் அரசே ஒப்புக்கொண்டுள்ளது. அமைதி வழி இருக்கும்போது போர் பதற்றத்தை பாகிஸ்தான் தான் தேர்வு செய்து கொண்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், பொருளாதார ரீதியாக பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக வங்கி மற்றும் உலக நாடுகளை உதவி கேட்டு கையேந்தி நிற்கிறது.
இதையும் படிங்க: சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

இந்தியாவின் தாக்குதலால் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதால் தனது நட்பு நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடி கடன் கேட்டுக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இது தொடர்பாக பாகிஸ்தானின் பொருளாதார விவகார அமைச்சகத்தின் எக்ஸ் பதிவில், எதிரிகளால் ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்குப் பிறகு சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடன் கேட்பதாக வேண்டுகோள் விடுத்துள்ளது.. பொருளாதார இழப்பு மற்றும் சந்தை வீழ்ச்சி ஏற்பட்டுவதால் கடனுதவி கேட்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள பாகிஸ்தான் அரசு தங்கள் கணக்கு செய்யப்பட்டுள்ளதாக மழுப்பலாக பேசி உள்ளது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல பாகிஸ்தான் தற்போது நடந்து கொண்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஆயுதப்படைகளுடன் துணை நிற்போம்.. ராணுவ தாக்குதலுக்கு காங்கிரஸ் ஆதரவு..!