போர் நிறுத்த ஒப்பந்ததிற்கு ஒப்புக் கொண்ட 3 மணி நேரத்திலேயே மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறலை தொடங்கியது. பல்வேறு இடங்களில் பீரங்கி குண்டுகள் சத்தம் கேட்பதாகவும், ட்ரோன்கள் தென்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, சமீபத்திய நாட்களில் எதிரிகளின் நடவடிக்கைகள் கோழைத் தனமாகவும் வெட்கக்கேடாகவும் உள்ளது என்றும் பகல்காம் சம்பவத்தை சாக்குபோக்காக வைத்து இந்தியா நம் மீது அநீதியான போரை நடத்தியது என்றும் பேசியுள்ளார். தங்கள் தாக்குதல் எதிரியின் விமானத்தளங்களையும், ரஃபேல் விமானங்களையும் சுட்டு வீழ்த்தியதாகவும், லட்சக்கணக்கான மக்களின் நலனுக்காக போர் நிறுத்த திட்டத்திற்கு நாங்கள் நேர்மறையாக பதில் அளித்துள்ளோம் என்றும் கூறினார். ஆனால், பாகிஸ்தானின் சுதந்திரத்திற்கு யாராவது சவால் விடுத்தால் அது தன்னை தற்காத்துக் கொள்ள எதையும் செய்யும் என்றும் பேசி இருந்தார். இது வெளிப்படையான ஆக்கிரமிப்பு தான் என்றும் பேசி இருந்தார்.
இதையும் படிங்க: சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்று பார்த்தால், இந்தியாவின் அப்பாவி சுற்றுலா பயணிகளை கொன்ற தீவிரவாதிகளை தான் இந்தியா குறி வைத்தது. ஆனால் ஆடு தானே வந்து தலையை விட்ட கணக்காக காஷ்மீரில் மக்கள் வாழும் குடியிருப்புகளை தாக்கியது முதலில் பாகிஸ்தான் ராணுவம் தான்., மீண்டும் மீண்டும் தாக்குதலை நடத்தி மூக்குடைந்து போனது மட்டுமில்லாமல் போர் ஒப்பந்த்திற்கு ஒத்துக் கொள்வது போல செய்து மீண்டும் தன் நரித் தந்திரத்தை காட்டியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: துள்ளும் பாக்...துரத்தி அடிக்கும் இந்தியா! ராணுவ மையத்தில் நுழைந்த மர்ம நபருடன் கடும் துப்பாக்கிச் சண்டை