இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்காக ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி மசூத் அசாருக்கு ரூ.14 கோடியைப் பாகிஸ்தான் அரசு வழங்க உள்ளது. பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய பாதுகாப்புப் படையினர் மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது வான் வழியாக துல்லிய தாக்குதல் நடத்தினர்.

இதில், பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகம் தவிடுபொடியானது. அந்த வளாகத்தில் தங்கியிருந்த அந்த அமைப்பின் தலைவரும் ஐ.நா. அவையால் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவருமான மசூத் அசாரின் மூத்த சகோதரி, அவருடைய 5 வாரிசுகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் மசூத் அசார் வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பினார். இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் அரசு இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதியை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

தாக்குதலில் உயிரிழந்த சட்டபூர்வ வாரிசுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார். அதன்படி, தாக்குதலில் 14 பேரை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு ரூ.14 கோடி கிடைக்கும். அது மட்டுமல்ல, இந்தியாவின் தாக்குதலில் இடிந்த கட்டிடங்கள் மீண்டும் கட்டித் தரப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் தீவிரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. பொதுமக்கள் உயிரிழக்காத நிலையில் உயிரிழந்தவர்களின், அதாவது தீவிரவாதிகள் வாரிசுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் எனப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!