பாகிஸ்தான் இராணுவத்தின் மூக்கு வெட்டப்பட்டதால், பாகிஸ்தான் இஸ்லாமிய நாடுகளை துணைக்கு அழைத்து கெஞ்சி வருகிறது. இந்தியாவுக்கு எதிராக வங்கதேசத்தையும் அழைத்துள்ளது.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் உச்சத்தில் உள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரால் கோபமடைந்த பாகிஸ்தான், கடந்த இரண்டு இரவுகளாக இந்தியாவைத் தாக்க முயற்சித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் தகுந்த பதிலடியைப் பெற்று நொந்துபோய் உள்ளது. சனிக்கிழமை அதிகாலை, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள சக்லாலா உட்பட பல விமானப்படைத் தளங்களை இந்தியா குறிவைத்தது.

பாகிஸ்தானின் மூன்று விமானப்படைத் தளங்களிலும் பெரும் சேதம் விளைவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் கரங்களால் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்டு வரும் பாகிஸ்தான், இப்போது இஸ்லாமிய ஆட்டத்தை தொடங்கி உள்ளது.
இதையும் படிங்க: இந்தியா எங்களை தாக்கவில்லை.. பாக். குற்றச்சாட்டை மறுத்த ஆப்கானிஸ்தான் அரசு!!
பாகிஸ்தான் இப்போது தனது நாட்டின் அரசு தொலைக்காட்சியில் முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க ஒளிபரப்பாளரான சிஎன்என் தகவலின்படி, இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவி கோரி பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியில் வங்கதேசம், கிழக்கு ஆசியாவின் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியப் படைகள் உள்ளே நுழைந்து அவர்களைக் கொன்று, அதன் தாக்குதலை முறியடிக்கும் நேரத்தில் பாகிஸ்தானின் இந்த வேண்டுகோள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இன்று காலை, பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி கூறுகையில், ''இந்தியா தனது மூன்று விமானப்படை தளங்களை ஏவுகணைகளால் தாக்கியுள்ளது. ராவல்பிண்டியில் உள்ள சக்லாலா விமானப்படை தளம் (நூர் கான்) தவிர ஷோர்கோட் விமானப்படை தளம், முரித் விமானப்படை தளத்தை இந்தியா போர் விமானங்களால் குறிவைக்கப்பட்டது. ராவல்பிண்டி நகரில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் இருந்து சிறிது தூரத்தில் சக்லாலா விமானப்படை தளம் அமைந்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகருக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள், ராணுவத் தலைவர்கள் வருகை தரும் போது சக்லாலா விமானப்படை தளம் பயன்படுத்தப்படும். முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு இந்திய ராணுவ தளங்கள், நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை இந்தியப் படைகள் முற்றிலுமாக முறியடித்தன. இதற்கிடையில், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஃபத்தா ஏவுகணையைப் பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணையை இந்தியா வானிலேயே அழித்தது.
இதையும் படிங்க: தீவிரவாத பாகிஸ்தானை லண்டனில் தோல் உரித்த தமிழர்..! ஆதாரம் காட்டி அதிரடி..!