பாகிஸ்தானும் அமெரிக்காவும் திடீர்னு கைகோர்த்து நட்பு பாராட்ட ஆரம்பிச்சிருக்கறது, சர்வதேச அரசியல் களத்துல பெரிய சலசலப்பை கிளப்பியிருக்கு. எப்போதும் பாகிஸ்தானோட ‘ஆல்-வெதர்’ நண்பரா இருக்குற சீனாவுக்கு இது வயிற்றுல புளியைக் கரைக்கற மாதிரி இருக்கு. ஆனா, சீன நிபுணர்கள், “பாகிஸ்தான் எங்களை விட்டு அமெரிக்காவுக்கு ஓடிடும்னு நினைக்காதீங்க. அவங்க அவ்வளவு சீப்பா வசமாக மாட்ட மாட்டாங்க,”னு கூலா சொல்றாங்க.
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்பு, ‘எவ்வளவு உயரம்னா இமயமலைக்கு மேல, எவ்வளவு ஆழம்னா இந்தியப் பெருங்கடலுக்கு அடியில’னு சொல்லப்படுற அளவுக்கு வலுவானது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார இடைவழி (CPEC) மூலமா பல பில்லியன் டாலர் திட்டங்களை சீனா பாகிஸ்தான்ல செயல்படுத்திட்டு இருக்கு. கடந்த மே மாசத்துல நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலில், இந்தியாவோட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு எதிரா பாகிஸ்தானுக்கு ஆதரவா சீனா குரல் கொடுத்தது.
ஆனா, இப்போ அமெரிக்கா திடீர்னு பாகிஸ்தானோட நெருக்கத்தை கூட்டியிருக்கு. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருந்து வச்சு உபசரிச்சது, பயங்கரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானோட நடவடிக்கைகளை பாராட்டியது எல்லாம் புது திருப்பமா இருக்கு.
இதையும் படிங்க: அத்தனைக்கும் காரணம் காஷ்மீர் பிரச்னைதான்!! பாக்., பிரதமர் ஷெபாஸ் புது உருட்டு!!

டிரம்ப், “இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்,”னு தொடர்ந்து சொல்லிட்டு இருக்கார். இந்த நெருக்கம், இந்தியா, சீனா, மத்திய கிழக்கு பகுதிகளில் புவிசார் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும்னு எதிர்பார்க்கப்படுது. ஆனா, சீன நிபுணர்கள் இதை கூலா எடுத்துக்கறாங்க. “பாகிஸ்தான் எங்களை விலையாக் கொடுத்து அமெரிக்காவோட நட்பை வளர்க்காது.
சீனாவோட உலகளாவிய செல்வாக்கை கட்டுப்படுத்தறதுக்காக அமெரிக்கா இந்த உத்தியை பயன்படுத்துது. ஆனா, பாகிஸ்தான் இதை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கு. சீனா-பாகிஸ்தான் உறவோட அடித்தளத்தை இது அசைக்காது,”னு சீன நிபுணர்கள் தெளிவா சொல்றாங்க.
கடந்த 1960-களில் இருந்து சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரா ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கியிருக்காங்க. சீனா, பாகிஸ்தானுக்கு அணு ஆயுத திட்டத்துல இருந்து பலவிதமான ஆயுதங்கள், பொருளாதார உதவி வரை எல்லாத்தையும் கொடுத்து ஆதரவு கொடுத்து வருது. 2013-ல அறிவிக்கப்பட்ட BRI திட்டத்தோட முக்கிய அங்கமா CPEC இருக்கு, இது பாகிஸ்தானோட பொருளாதாரத்தை வலுப்படுத்தியிருக்கு.
ஆனா, அமெரிக்காவும் பாகிஸ்தானுக்கு எப்போதும் பெரிய அளவுல பொருளாதார, ராணுவ உதவி கொடுத்து வந்திருக்கு. ஆனா, 2021-ல அமெரிக்கா ஆப்கானிஸ்தான்ல இருந்து வெளியேறின பிறகு, இந்தியாவோட உறவை வலுப்படுத்தறதுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாகிஸ்தானை கொஞ்சம் பின்னுக்குத் தள்ளிடுச்சு.
இப்போ டிரம்ப் மறுபடியும் பாகிஸ்தானோட நெருக்கத்தை கூட்டறது, சீனாவுக்கு எதிரான ஒரு உத்தியா பார்க்கப்படுது. ஆனா, பாகிஸ்தான் இதுல ஸ்மார்ட்டா விளையாடுது. “சீனாவோட நட்பு எங்களுக்கு முக்கியம், ஆனா அமெரிக்காவோட உறவையும் பாகிஸ்தான் பயன்படுத்திக்கும்,”னு பாகிஸ்தான் வட்டாரங்கள் சொல்றாங்க. இந்தியாவுக்கு இது கொஞ்சம் கவலையை கொடுத்தாலும், சீனா-பாகிஸ்தான் கூட்டணி அவ்வளவு சீக்கிரம் பலவீனப்படாதுனு ஆய்வாளர்கள் கருதறாங்க.
இதையும் படிங்க: எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாக்.,? தொடரும் பதற்றம்.. களமிறங்கிய ராணுவம்..!