ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. 
பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டது. ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் மிக்-29கே போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் காஷ்மீரின் நிலை குறித்து ஆய்வு செய்ய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஸ்ரீநகருக்கு விரைந்தார். பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பயங்கரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தான் தரப்பு கலக்கம் அடைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தனது குடும்பத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் பல அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை தனியார் விமானங்களைப் பயன்படுத்தி இங்கிலாந்து மற்றும் நியூ ஜெர்சிக்கு அனுப்பியுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றமான சூழலில் இந்தியா பதிலடியில் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்து இவ்வாறு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: வடகிழக்கு இந்தியாவுக்கு ஸ்கெட்ச்.. பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கும் வங்கதேசம்..!

ஆனால் பாகிஸ்தான் அமைச்சர்களும் ராணுவ தளபதியும் வாய்ச்சவடால் பேசி வரும் நிலையில், இந்தியாவின் பதிலடிக்கு பயந்து வளைகுடா நாடுகளிடம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் ஆதரவு கேட்டு கெஞ்சி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து வளைகுடா நாடுகளின் தூதர்களை அவர் சந்தித்தார்.சவுதி, குவைத் மற்றம் ஐக்கிய அரபு நாடுகளின் தூதர்களை ஒரே நாளில் சந்தித்து, இந்தியா, பாகிஸ்தான் பதற்றம் குறித்து விளக்கினார்.

பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பாகிஸ்தான் மீது இந்தியா வீண் பழியை சுமத்துகிறது. இது தொடர்பாக சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்த பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. ஆனால் இதை இந்தியா ஏற்கவில்லை.
மாறாக, பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக எங்களுக்கு நம்பத்தகுந்த உளவு தகவல் கிடைத்து இருக்கிறது.

இந்த விவகாரத்தில் வளைகுடாவை சேர்ந்த சகோதர நாடுகள் பாகிஸ்தானுக்கு துணை நிற்க வேண்டும்.எல்லையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்க இந்தியாவை வலியுறுத்த வேண்டும். தெற்காசியாவில் அமைதி நிலவுவதையே பாகிஸ்தான் விரும்புகிறது. அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானுடன் வளைகுடா நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஷெபாஷ் ஷெரீப் கோரிக்கை வைத்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வளைகுடா நாட்டு தூதர்களிடம் பேசி இருக்கும் அதே பாகிஸ்தான் தான், நம் எல்லையில் தொடர்ந்து 9வது நாளாக வாலாட்டி வருகிறது.போர் விதிகளை மீறி நேற்று இரவும் பல இடங்களில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு நம் வீரர்கள் உரிய பதிலடியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிலைமை படு மோசம்.. 5,000 வீரர்கள் ராஜினாமா செய்ய முடிவு.. பதற்றத்தில் கையை பிசையும் பாகிஸ்தான்..!