முப்படை தளபதிகளும் பிரதமரை சந்தித்து பிரதமர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு துறைக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்கள். இந்த நிலையில் தான் தற்பொழுது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனியாக ஒரு சந்திப்பை பிரதமருடன் மேற்கொண்டிருக்கிறார். பிரதமருடைய டெல்லி இல்லத்தில் நடைபெற்று வரக்கூடிய இந்த சந்திப்பின் பொழுது ஒரு சில முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன.
பாதுகாப்புதுறை அமைச்சர் ஏற்கனவே தங்கள் தரப்பில் செய்யப்பட்டிருக்கக்கூடிய ஏற்பாடுகள் தொடர்பான விவரங்களை எல்லாம் பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் விளக்கம் அளித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கான மிகப்பெரிய ஒரு பதில் விஷயமாக அந்த தாக்குதல் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்று மாலைக்குள் சில முக்கியமான அறிவிப்புகள் வெளியாக உள்ளதாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் கூட்டத்தின் நிறைவில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தான் மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகும் பாதுகாப்பு துறை அமைச்சர் தனியாக பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இந்திய தரப்பிலிருந்து பதிலடி பலமாக இருக்கும் என்று பாகிஸ்தானும் அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள். தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டினுடைய அமைச்சர்களும் தங்களுடைய செய்தியாளர் சந்திப்பில் அது தொடர்பான விவரங்களை பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள். இன்னும் 36 மணி நேரத்திற்குள் இந்தியாவிடமிருந்து நாங்கள் ஒரு பதிலடியை எதிர்பார்க்கின்றோம் என்றெல்லாம் பாகிஸ்தானுடைய அமைச்சர்களே வெளிப்படையாக சொல்லியிருப்பது உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்.. நாடாளுமன்றத்தை உடனே கூட்டுங்க.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!
இந்தியா எந்த மாதிரியான தாக்குதலை நடத்தும் என்ற அச்சத்துடனே பாகிஸ்தான் மக்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்கேற்ப இந்திய தரப்பிலும் அடுத்தடுத்து நடவடிக்கைகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற இந்த பஹல்காம் தாக்குதல் சம்பவத்திலே 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அதன் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிய இந்திய ராணுவமும் உளவு அமைப்புகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன.

அந்த தகவல் அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவத்தில் இருக்கக்கூடிய ஒரு சில படைப்பிரிவுகள் இந்த காஷ்மீர் துப்பாக்கி சம்பவத்திலும் தங்களுடைய பங்களிப்பை வழங்கி இருக்கின்றன. இந்த சதிகார செயலிலே பாகிஸ்தான் நாட்டினுடைய ராணுவத்தின் ஒரு சில படைப்பிரிவுகளும், அதில் இருக்கக்கூடிய சில நபர்களும் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பது வரை உளவுத்துறை பல்வேறு முக்கிய தகவல்களை திரட்டி விட்டது. அதுமட்டுமல்லாமல் தேசிய பாதுகாப்பு முகமையும் பாகிஸ்தானுக்கு இருக்கக்கூடிய பின்னணி குறித்த விவரங்களை தெளிவுபடுத்தி இருக்கின்றது.
தற்போது அனைத்து தகவலும் கிடைக்கப்பட்ட பிறகு இந்திய தரப்பில் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு துறை அமைச்சருடன் தனியாக ஆலோசித்துள்ளார். இந்தியாவிடம் இருக்கக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்புகள், தரைப்படை வீரர்கள் இந்தியாவிடம் இருக்கக்கூடிய நவீன ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று சொல்லப்படுகின்றது.

முக்கியமான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டமும் நடைபெற்று வருகின்றது. இந்த சூழ்நிலையில் தான் அமித் ஷாவுடனும், ராஜநாத் சிங் தொடர்ந்து தனித்தனியான சந்திப்புகளை பாதுகாப்பு துறை அமைச்சர் மேற்கொண்டிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய அதிகாரப்பூர்வ இல்லத்தில் டெல்லியில் இருந்தவாறு இந்த ஆலோசனையில் பங்கேற்றி இருக்கின்றார். இந்திய படை பிரிவினரை பொறுத்தவரை எல்லைகளில் போதுமான அளவு தயார் நிலையில் இருக்கின்றார்கள். இந்தியாவின் அதிநவீன போர் கப்பல்களும் தயார் நிலையில் அரபிக் கடல் போரியில் பாகிஸ்தானை நோக்கி நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதேபோன்று ரபேல், சுபாய் உள்ளிட்ட அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளான போர் விமானங்களும் தயாராகவே இருக்கின்றன என்ற தகவலை ராணுவம் சார்பில் கூறியிருந்தார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை தன்னிடம் இருக்கக்கூடிய அந்த போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களில் அதிநவீன ஏவுகனைகளை பயன்படுத்தக்கூடிய திறன் கொண்ட ஒரு நாடாக இருக்கின்றது. ரஷ்ய பின்னணியுடன் தயாரிக்கப்பட்ட ப்ரோமோஸ் போன்ற ஏவுகணைகள் நம்மிடம் இருக்கின்றன. அதேபோன்று அஸ்காரா போன்ற புதிய உள்நாட்டுக்கு தயாரிப்பு ஏவுகனைகளும் எந்த ஒரு வான் பாதுகாப்பு அமைப்பிலும் பொருத்தப்பட்டு தரையிலிருந்து தரையை நோக்கி அல்லது தரையிலிருந்து வானை நோக்கி அல்லது வானில் இருந்து வான் நோக்கி என்று அனைத்து நிலைகளிலும் தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணைகள் நம்மிடம் உள்ளன. ந்த ஆலோசனை கூட்டத்தின் பிறகாக ராணுவ தரப்பிலிருந்து ஏதேனும் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
இதையும் படிங்க: காங்கிரஸின் பாக்., விசுவாசிகளே... இந்தியாவை விட்டு ஓடிவிடுங்கள்... பவன் கல்யாண் ஆவேசம்..!