பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஸ்லோவாக்கியாவின் மிக உயரிய தேசிய விருதான 'தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிளாஸ்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடிக்குக் கிடைக்கும் 33வது சர்வதேச கௌரவமாகும்.
பிராட்டிஸ்லாவாவில் நடைபெற்ற ஒரு விழாவில், ஸ்லோவாகியா அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி பிரதமர் மோடிக்கு விருதை வழங்கினார்.
"இன்று மாலை பிராட்டிஸ்லாவாவில் 'தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிளாஸ்' -ஐப் பெறுவதில் பெருமை கொள்கிறேன். இந்தியாவின் 140 கோடி மக்களுக்குச் சொந்தமான இந்த கௌரவத்தை வழங்கிய ஸ்லோவாக்கியா மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் எனது நன்றிகள். இந்த விருதை இந்தியாவுக்கும் ஸ்லோவாக்கியாவுக்கும் இடையிலான நீடித்த நட்புக்கு அர்ப்பணிக்கிறேன்," என்று பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் பொற்கால ஆட்சி..! புகழ்ந்த தள்ளிய நயினார் நாகேந்திரன்..!!
இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியா மக்களை ஒன்றிணைக்கும் அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் பாசத்திற்கு இந்த விருது ஒரு சான்றாகும் என்றும், இந்த கௌரவம் இரு நாடுகளின் எதிர்கால சந்ததியினரையும் தங்களின் சிறப்பு நட்பைத் தொடர்ந்து பேணி வளர்க்க ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
'தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிளாஸ்' என்பது ஸ்லோவாக்கியாவால் வெளிநாட்டுக் குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் மிக உயர்ந்த குடிமை மற்றும் இராணுவ அரசு விருதாகும்.
பிரதமர் மோடி தனது ஒரு வார கால ஐரோப்பியப் பயணத்தின் ஒரு பகுதியாக பிராட்டிஸ்லாவாவில் இருக்கிறார். ஒரு இந்தியப் பிரதமர் ஐரோப்பிய நாட்டிற்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக, இந்தியாவும் ஸ்லோவாக்கியாவும் தங்களது உறவுகளை ஒரு விரிவான கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தி, இடம்பெயர்வு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக 11 ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தின.
இதையும் படிங்க: மண் மணத்தை திரையில் விதைத்த பாரதிராஜா..! இயக்குனர் இமயத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!