கர்நாடகாவில் 7,000 மாணவர்கள் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கல்லூரிகளில் கட்டாய எச்.ஐ.வி. பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 7,000-க்கும் மேற்பட்டோருக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ஹெச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்களை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்தியாவில் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் கர்நாடகா 3-வது இடத்தில் உள்ளதாகவும், 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கே ஹெச்.ஐ.வி தொற்று மிக வேகமாக உயர்ந்து வருவதாகவும் என KSAPS தரவுகள் சுட்டிக்கட்டின. சமீபத்தில் 18-25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று இருப்பது உறுதியானதால், கல்லூரி வளாகங்களிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: நீளும் பிரச்சனை... விஜய் வந்தால் போராட்டம்... கன்னட கூட்டமைப்பு தலைவர் எச்சரிக்கை..!
இந்த தகவலுக்கு விளக்கம் அளித்துள்ள கர்நாடக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், 2004ஆம் ஆண்டிலிருந்து 18 முதல் 35 வயதுக்குட்பட்ட சுமார் 39,000 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், அதில் மாணவர்கள் என்ற அடிப்படையில் தனித்தனி தரவுகள் எதுவும் பராமரிக்கப்படுவதில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், 7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும், 2017ஆம் ஆண்டு அமலுக்கு வந்த சட்டத்தின்படி எவருக்கும் கட்டாய எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
எச்.ஐ.வி. குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நாளை ஆந்திரா-கர்நாடகா பயணம்.. பல கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்!