பாரிஸ்: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உண்மையான வெற்றி, அது மனிதர்களின் வாழ்க்கையை எந்தளவுக்கு மேம்படுத்துகிறது என்பதில்தான் இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஜி-7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிறப்பு அமர்வில் பங்கேற்று அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
உலக நாடுகள் மத்தியில் தற்போது அதிகம் பேசப்படும் தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். மருத்துவம், கல்வி, தொழில், விவசாயம், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பேசிய பின்னர், தனது சமூக வலைதளப் பதிவிலும் பிரதமர் மோடி இதுகுறித்து கருத்து வெளியிட்டார். அதில், மனித வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்ட தொழில்நுட்பமாக ஏ.ஐ. வளர்ந்து வருவதாக கூறியுள்ளார். உலகின் பல நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய கருவியாகக் கருதுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: போர்களால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு யார் உதவுவது?! ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கேள்வி!

ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வெறும் புதுமைகள் அல்லது இயந்திர திறன்களால் மட்டுமே அளவிடப்படக் கூடாது என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவது, சேவைகளை அணுகும் வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் பயன் சேர்ப்பது போன்ற அம்சங்களே ஒரு தொழில்நுட்பத்தின் வெற்றியை நிர்ணயிக்க வேண்டும் என்றார்.
சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களின் திறன்களை மேம்படுத்தி, புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜி-7 மாநாட்டில் உலகத் தலைவர்கள் பலரும் தொழில்நுட்ப வளர்ச்சி, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்து கருத்துகளை பகிர்ந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த கருத்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மனித மையப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியே எதிர்கால உலகின் முக்கிய தேவையாக இருக்கும் என்ற செய்தியை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக அரசியல் மற்றும் தொழில்நுட்ப வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: இவ்வளவு நாள் ஆகும்னு நான் நினைச்சு பாக்கல!! எனக்கு ஆச்சரியமாக இருக்கு! அதிபர் ட்ரம்ப் பேச்சு!