இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த இறக்குமதி வரியை அதிரடியாக 18% ஆகக் குறைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இரு பெரும் ஜனநாயக நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம், உலகப் பொருளாதார வரிசையில் இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும் எனப் பிரதமர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் டிரம்பின் இந்த அதிரடி முடிவை வரவேற்றுப் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், இந்தியா - அமெரிக்கா இடையிலான இந்த இணக்கம், இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் புதிய வித்திடும். இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல, இரு நாடுகளின் நட்புறவின் புதிய மைல்கல். உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு அதிபர் டிரம்பின் தலைமைத்துவம் மிகவும் அவசியம். அவரின் இந்த முடிவு உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்."
இந்தியாவிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நன்மைகள்:
இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியப் பொருளாதாரம் அடையப்போகும் மாற்றங்கள், ஏற்றுமதிப் புரட்சி: அமெரிக்கச் சந்தையில் வரி குறைக்கப்பட்டதால் ஜவுளி, ஆடை, வாகன உதிரிபாகங்கள், மருந்துகள் (Pharma)மற்றும் ஐடி (IT) துறைகள் பெரும் பலன் பெறும். இந்தியப் பொருட்கள் உலகத் தரத்தில் குறைந்த விலையில் அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விளையாட்டின் நேர்மைக்கு எதிரானது! இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை!
இத்தகைய தடையற்ற வர்த்தக நகர்வுகளால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7% ஐத் தாண்டக்கூடும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் கணித்துள்ளார்.
ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் புத்துயிர் பெறுவதால், கோடிக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரைக்கடத்திகள் (Semi-conductors) மற்றும் முக்கியமான கனிமங்கள் துறையில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா ஒரு பாதுகாப்பான விநியோகச் சங்கிலியை உருவாக்க இந்த ஒப்பந்தம் உதவும். வர்த்தகத் தடைகள் நீங்குவதால், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டும். இது இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
கடந்த ஆண்டு டிரம்ப் நிர்வாகத்தால் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50% வரிகளால் நிலவிய நிச்சயமற்ற தன்மை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இது இந்தியத் தொழிலதிபர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளதுடன், அமெரிக்காவுடனான வர்த்தகச் சமநிலையை மீண்டும் சீரமைக்க உதவும்.
இதையும் படிங்க: வளர்ந்த இந்தியாவிற்கான ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்! 140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்!