இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்தியா பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய இந்தியா பல தீவிரவாதிகளை கொன்று குவித்தது. இந்த நிலையில் காஷ்மீரில் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய பாகிஸ்தானின் முயற்சியை வான்வெளியிலேயே இந்தியா முறியடித்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

போர் பதற்றம் நிலவுவதால் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இஏ.,வி.ஆர் சென்னை, பீனிக்ஸ், ஸ்பென்சர் பிளாசா உள்ளிட்ட மால்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் ஒவ்வொரு வணிக வளாகத்திற்கும் காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா - பாக். இடையே பரபரப்பான சூழல்.. தமிழகத்தில் 2 இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை!!

அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மால்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ள நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முக்கிய புள்ளிகளுக்கு செக்..! சென்னையில் பல இடங்களில் ED ரெய்டு..!