அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்டு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிலையில், காசா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாகவும், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதை ஹமாஸுக்கு எதிரான "சக்திவாய்ந்த தாக்குதல்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடந்து வரும் போர் நிறுத்தத்தை மீறி இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
காசாவின் சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல், அ "இடிபாடுகளுக்கு அடியில் இருந்து இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் மீட்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார். அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் ஒன்று மற்றும் அவர்களின் வாகனம் மோதி ஐந்து பேர் கொல்லப்பட்ட மற்றொரு தாக்குதல் உட்பட காசா முழுவதும் குறைந்தது மூன்று தாக்குதல்கள் நடந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: காசா அமைதி திட்ட ஒப்பந்தம்..!! முதல் நபராக கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்..!
ரஃபாவில் ஹமாஸ் தனது படைகளைத் தாக்கியதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் ராணுவத்தின் இந்த கருத்தை ஹமாஸ் மறுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஹமாஸ் அதன் சிவப்பு கோட்டை தாண்டியதாகக் குற்றம் சாட்டினார், காசாவில் உள்ள ஐ.டி.எஃப் வீரர்கள் மீது இன்று ஹமாஸ் நடத்தும் தாக்குதல் பெரும் பலத்துடன் எதிர்கொள்ளப்படும் என ஏற்கனவே அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அக்டோபர் 10ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காசா - இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்து வைத்து போர் நிறுத்தம் செய்து வைத்தார். ஆனால் போர் நிறுத்தத்தைக் காற்றில் பறக்கவிட்டு இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது அத்துமீறல்களை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. ஒருபுறம் மேற்குகரையை முற்றிலும் ஆக்கிரமிப்பதற்காக இஸ்ரேல் ராணுவத்திற்கு பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இஸ்ரேலிய நாடாளுமன்றம் (Knesset) சமீபத்தில் இரண்டு சர்ச்சைக்குரிய மசோதாக்களை 25-24 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் மேற்குக் கரைப் பகுதிகளை இஸ்ரேலிய அதிகார வரம்பிற்குள் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மேற்குக் கரையை இணைப்பது இஸ்ரேலுக்கு ஒரு பெரிய தவறாக இருக்கும் என்றும், இது அமெரிக்க ஆதரவை இழக்க வழிவகுக்கும் என்றும், தனது ஜனாதிபதி காலத்தில் அரபு நாடுகளுக்கு அளிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் வாக்குறுதிகள் இந்த நடவடிக்கையால் மீறப்படும் என்றும் இஸ்ரேலை எச்சரித்திருந்தார்.
இப்போது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இதையும் படிங்க: காசாவில் அமலுக்கு வந்தது போர் நிறுத்தம்..! வீடுகளை தேடிச்செல்லும் பாலஸ்தீனிய மக்கள்..!!