அமெரிக்காவுக்கு டூரிஸ்ட் விசாவுல வணிகமோ, சுற்றுலாவோ போக நினைக்கிறவங்களுக்கு ஒரு ஷாக்கிங் அப்டேட்! அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், உள்நாட்டு பாதுகாப்பு பேர்வழினு ஒரு புது விதிமுறையை கொண்டு வந்திருக்கார். இனி, சில நாட்டு பயணிகள் அமெரிக்காவுல விசா காலத்தை தாண்டி தங்காம இருக்கணும்னா, ரூ.13.17 லட்சம் (அதாவது $15,000) வரை டெபாசிட் பத்திரமா கட்டணும்! இந்த புது ரூல், ஆகஸ்ட் 20-ல இருந்து ஒரு வருஷத்துக்கு சோதனை முயற்சியா அமலுக்கு வருது. இதுக்கு முன்னாடி 2020-ல இதே மாதிரி ஒரு திட்டத்தை ட்ரம்ப் கொண்டு வந்தாரு, ஆனா கொரோனா பாண்டமிக் காரணமா அது முழுசா நடைமுறைக்கு வரல.
இந்த புது திட்டத்துல, அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு, விசா காலத்தை தாண்டி தங்குறவங்க அதிகமா இருக்குற நாட்டு பயணிகளுக்கு விசா கொடுக்கும்போது, $5,000, $10,000, அல்லது $15,000 (ரூ.4.40 லட்சம், ரூ.8.78 லட்சம், ரூ.13.17 லட்சம்) டெபாசிட் கேக்குற உரிமை கொடுக்கப்பட்டிருக்கு. இந்த டெபாசிட், நீங்க விசா காலத்துக்குள்ள அமெரிக்காவை விட்டு கிளம்பினா திரும்ப கொடுத்துடுவாங்க. ஆனா, காலம் தாண்டி தங்கினா, இந்த பணம் அரசாங்கத்தோட பாக்கெட்லயே போயிடும்! இந்த திட்டம், B-1 (வணிகம்) மற்றும் B-2 (சுற்றுலா) விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும். விசா வேவர் புரோகிராம் மூலமா வர்றவங்களுக்கு இது பொருந்தாது.
இந்த விதிமுறை எந்தெந்த நாடுகளுக்கு பொருந்தும்னு இன்னும் அமெரிக்கா அறிவிக்கலை, ஆனா 2023-ல DHS ரிப்போர்ட் படி, சாட், எரிட்ரியா, ஹைட்டி, மியான்மர், யெமன், புருண்டி, ஜிபூட்டி, டோகோ மாதிரியான நாடுகளுக்கு இது பொருந்தலாம்னு சொல்றாங்க. இந்த நாடுகளோட விசா ஓவர்ஸ்டே விகிதம் அதிகமாம். இதோட, தகவல் சரிபார்ப்பு சரியில்லாத நாடுகள், முதலீடு மூலமா குடியுரிமை கொடுக்குற நாடுகளைச் சேர்ந்தவங்களுக்கும் இந்த ரூல் பொருந்தலாம். “இது தேசிய பாதுகாப்புக்கு அவசியம், விசா ஓவர்ஸ்டே ஒரு பெரிய அச்சுறுத்தல்,”னு அமெரிக்க மாநிலத் துறை அறிக்கை விட்டிருக்கு.
இதையும் படிங்க: உங்க மிரட்டலுக்கு எல்லாம் பணிய மாட்டோம்!! அமெரிக்காவுக்கு ரஷ்யா வார்னிங்!! அதிகரிக்கும் பதற்றம்..!
இந்த புது ரூல், இந்திய பயணிகளையும் பாதிக்கலாம். ‘எக்ஸ்’ தளத்தில் @dmuthuk
பதிவு படி, ஒரு இந்திய குடும்பம் நாலு பேர் அமெரிக்காவுக்கு டூரிஸ்ட் விசாவுல போனா, ரூ.52 லட்சம் டெபாசிட் கட்ட வேண்டியிருக்கும்னு கவலை தெரிவிச்சிருக்கார். இது உண்மையா ஆனா, இந்தியாவுக்கு இந்த ரூல் பொருந்துமானு இன்னும் தெளிவு வரலை. ஆனா, இந்தியா ரஷ்யாவோட எண்ணெய் வர்த்தகத்தை தொடர்றதால, ட்ரம்போட 25% வரி விதிப்பு ஏற்கனவே இந்தியாவை பாதிச்சிருக்கு. இப்போ இந்த புது விசா ரூல் வந்தா, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு செலவு இன்னும் ஏறிடும்.

ட்ரம்போட இந்த நடவடிக்கை, சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்குறதுக்கு ஒரு பகுதியா இருக்கு. இவர் ஜூன்ல 12 நாடுகளுக்கு பயணத் தடை விதிச்சது, எல்லை பாதுகாப்பை அதிகப்படுத்தியது, சட்டவிரோதமா இருக்குறவங்களை கைது பண்ணுறது எல்லாமே இவரோட குடியேற்ற எதிர்ப்பு கொள்கையோட பகுதி. ஆனா, இந்த புது விசா பத்திர திட்டம், அமெரிக்க சுற்றுலா துறையை பாதிக்கலாம்னு US Travel Association எச்சரிக்கை விடுத்திருக்கு. 2025 மார்ச்சுல வெளிநாட்டு பயணிகள் 11.6% குறைஞ்சதும், கனடா, மெக்ஸிகோவில் இருந்து வரவு 20% குறைஞ்சதும் இதுக்கு ஒரு காரணமா இருக்கலாம்னு சொல்றாங்க.
இந்த திட்டம், அமெரிக்காவுக்கு சுற்றுலா வர்றவங்களுக்கு பெரிய தடையா இருக்கலாம். ஒரு குடும்பத்துக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல டெபாசிட் கட்டணும்னா, சாதாரண மக்களால எப்படி சமாளிக்க முடியும்? இந்தியா மாதிரியான நாடுகளுக்கு இது பொருந்துமானு ஆகஸ்ட் 20-க்கு முன்னாடி அமெரிக்கா அறிவிக்கும்.
இதையும் படிங்க: திரும்பும் திசையெல்லாம் ஆப்பு வைக்கும் டிரம்ப்..!! நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி நிறுத்தம்..!