ஜப்பான் அரசியலில் இப்போ ஒரு பெரிய பரபரப்பு! ஜூலை 20, 2025-ல் நடந்த நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில், பிரதமர் ஷிகெரு இஷிபாவோட லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) மற்றும் அதோட கூட்டணி கட்சியான கொமைட்டோ, 248 இருக்கைகள் கொண்ட மேல்சபையில் தனிப்பெரும்பான்மையை இழந்திருக்கு.
இந்த தோல்வி, இஷிபாவோட ஆட்சியை இன்னும் பலவீனப்படுத்தியிருக்கு. ஏற்கனவே கடந்த ஆண்டு (2024) கீழ்சபை தேர்தலில் LDP பெரும்பான்மையை இழந்து, சிறுபான்மை ஆட்சியாக இயங்கி வருது. இப்போ மேல்சபையிலும் இந்த தோல்வி, இஷிபாவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுது.
இந்த தேர்தலில் மேல்சபையின் பாதி, அதாவது 124 இருக்கைகளுக்கு போட்டி நடந்தது. LDP-கொமைட்டோ கூட்டணி, தங்களோட 75 இருக்கைகளோடு சேர்த்து 50 இடங்களை வென்று, 125 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை தக்க வைக்கணும்னு இஷிபா நம்பிக்கையோடு இருந்தார்.
இதையும் படிங்க: வடகொரியாவுக்கு ஸ்கெட்ச்! தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா அதிரடி!! களமிறங்கும் ரஷ்யாவால் அதிகரிக்கும் பதற்றம்!
ஆனா, NHK-வின் தகவல்படி, இந்த கூட்டணி 47 இடங்களை மட்டுமே வென்றது, 50 இடங்களுக்கு 3 குறைவு. இது 1955-க்கு பிறகு LDP இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்த முதல் முறையாகும். இந்த தோல்வி, இஷிபாவோட அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியிருக்கு.

இந்த தோல்விக்கு முக்கிய காரணங்கள் என்னனு பார்த்தா, பொருளாதார பிரச்சனைகள் முக்கியமானவை. ஜப்பானில் பணவீக்கம், குறிப்பாக அரிசி விலை உயர்வு, மக்களை கடுமையாக பாதிச்சிருக்கு. 28% வாக்காளர்கள் உணவு விலை உயர்வை முக்கிய பிரச்சனையாக சொல்லியிருக்காங்க.
இதோடு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவிச்ச 25% வரி (டாரிஃப்) ஆகஸ்ட் 1-லிருந்து அமலுக்கு வருது, இது ஜப்பானின் ஆட்டோ தொழிலையும், பொருளாதாரத்தையும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்குது. இஷிபா இந்த வரி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காட்ட முடியலனு எதிர்க்கட்சிகள் விமர்சிக்குது.
மக்களோட அதிருப்தியை பயன்படுத்தி, வலதுசாரி பாப்புலிஸ்ட் கட்சியான சான்சைட்டோ (Sanseito) 14 இடங்களை வென்று, மொத்தம் 15 இடங்களோடு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு. இந்த கட்சி, “ஜப்பான் முதலில்”னு கோஷமிட்டு, புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்தது.
இதோடு, டெமாக்ரடிக் பார்ட்டி ஃபார் தி பீப்பிள் (DPFP) மற்றும் மைய-இடதுசாரி கான்ஸ்டிடியூஷனல் டெமாக்ரடிக் கட்சி (CDP) ஆகியவையும் இருக்கைகளை கூட்டியிருக்கு. CDP தலைவர் யோஷிஹிகோ நோடா, “மக்கள் இஷிபா ஆட்சிக்கு ‘நோ’ சொல்லியிருக்காங்க”னு கூறியிருக்கார்.
இஷிபா இந்த தோல்வியை “புனிதமாக ஏத்துக்கறேன்”னு சொல்லி, ஆட்சியை தொடரப் போவதாக அறிவிச்சிருக்கார். ஆனா, LDP-யின் உள்ளேயே, முன்னாள் பிரதமர் தாரோ ஆசோ உள்ளிட்ட பலர் இஷிபாவை பதவி விலக சொல்றாங்க. இஷிபாவுக்கு மாற்றாக, சனே தகைச்சி, தகயுகி கோபயாஷி, ஷின்ஜிரோ கொய்ஸுமி ஆகியோர் பேசப்படுறாங்க.
இந்த நிலையில், இஷிபாவோட ஆட்சி எப்படி தொடரும்னு பெரிய கேள்வி. எதிர்க்கட்சிகளோடு இணைந்து சட்டங்களை நிறைவேற்ற வேண்டிய நிலை இருக்கு. ஆனா, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையாம இருக்கறது இஷிபாவுக்கு சிறிய நிம்மதியா இருக்கலாம்.
ஆனாலும், அமெரிக்காவோட வரி பேச்சுவார்த்தை, பணவீக்கம், வயதான மக்கள் தொகை பிரச்சனைனு பல சவால்கள் முன்னாடி இருக்கு. இஷிபா இந்த சிக்கல்களை எப்படி கையாளப் போறார்னு பார்க்க வேண்டியிருக்கு!
இதையும் படிங்க: ஒரு நொடி போதும்! மொத்தமா முடிச்சிரலாம்! ஜப்பான் படைத்த புதிய சாதனை! வாய் பிளக்கம் நெட்டிசன்கள்!