ஜூன் 16-17 தேதிகளில் பிரான்சின் எவியான் நகரில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக, அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய பிரதமர் மோடி கடந்த ஜூன் 13ம் தேதி பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு ஆறு நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அவர் புறப்படுவதற்கு முன்பு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மோடி எவியான் விமான நிலையத்திற்குச் சென்று, ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மோடி தனது சோசியல் மீடியா பக்கத்திலும், “ஜி7 மாநாட்டில் இந்தியாவின் பங்கேற்பு, நமது கூட்டாளிகள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், நமது வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கையும் பிரதிபலிக்கிறது. இந்தியா அழைக்கப்படும் எட்டாவது தொடர்ச்சியான ஜி7 உச்சிமாநாடு இதுவாகும். ஜி7 மாநாட்டில், இந்தியா தனக்காகப் பேசுவது மட்டுமல்லாமல், உலகத் தெற்கின் அபிலாஷைகளுக்கும் குரல் கொடுக்கும்” என பதிவிட்டிருந்தார்.
இந்த மாநாட்டின் போது பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் நேருக்கு நேஎ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓமன் வளைகுடா அருகே கடந்த 10-ம் தேதி ‘எம்டிசெட்டபெல்லோ' கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இதற்கு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரை அழைத்து இந்தியா நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘எம்டி ஜல்வீர்' என்ற கப்பல் மீது அமெரிக்கப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 20 இந்திய மாலுமிகள் பணியாற்றுகின்றனர். கடந்த நாட்களில் இந்திய மாலுமிகள் பணியாற்றும் 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு லிஸ்டே என்கிட்டே... அதை என்ன செய்ய வச்சிடாதீங்க... அரசு ஊழியர்களை நேருக்கு நேர் எச்சரித்த அருண்ராஜ்...!

பிரான்ஸில் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கும் போது இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து பிரதமர் மோடி டிரம்பிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 பிப்ரவரியில் வாஷிங்டன் டி.சி.யில் கடைசியாகச் சந்தித்த பிறகு, மோடியும் டிரம்பும் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். திட்டமிடப்பட்ட கலந்துரையாடலின் விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும், பேச்சுவார்த்தையில் உள்ள இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிற பிராந்திய, உலகளாவிய விஷயங்கள் குறித்து இரு தரப்பினரும் விவாதிப்பார்கள் எனக்கூறப்படுகிறது.
டிரம்ப் மேற்கு ஆசியத் தலைவர்களைச் சந்திப்பார் மற்றும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எகிப்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களை திரு. டிரம்ப் தனித்தனியாக சந்திப்பார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெலென்ஸ்கியுடன் இருதரப்பு சந்திப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை, ஆனால் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இரு தலைவர்களும் சந்திக்கக்கூடும் எனக்கூறப்பட்டுள்ளது.
உச்சிமாநாட்டில் தலைவர்களுடன் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு, விநியோகச் சங்கிலியின் மீள்திறன், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்ப திரு. டிரம்ப் திட்டமிட்டிருந்தார் என்று அதிகாரிகளில் ஒருவர் கூறினார். மேலும், மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்குத் தேவையான முக்கிய கனிமங்களின் விநியோகச் சங்கிலியில் மீள்திறனை அதிகரிப்பதிலும் அவர் பணியாற்றத் திட்டமிட்டிருந்தார்.
இதையும் படிங்க: "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!