ரஷ்யாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.8 ரிட்டர் அளவாக பதிவாகியுள்ளது. ரஷ்யா வரலாற்றிலேயே எழுபது ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த நிலநடுக்கம் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவை சுனாமி தாக்கியது. ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் பெரிய வடக்கு தீவான ஹெக்கைடோவின் கடலோர பகுதிகளை சுனாமி தாக்கியது.
இதனை அடுத்து, சுனாமி தாக்கிய நிலையில் பல்வேறு பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் அமலுக்கு வந்தது. சுனாமி தாக்கியதை அடுத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் போன்றவற்றை ரஷ்யா முடுக்கி விட்டுள்ளது.
இதையும் படிங்க: ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்; உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய மக்கள்...!
மேலும் சுனாமி தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில் சுனாமி தாக்கிய சம்பவத்தை அடுத்து 10 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள 10 நாடுகளுக்கு இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தைவான், சீனா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, கனடா, பெரு, ஈக்குவடார் நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரஷ்யாவில் அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கிய விமானம்.. 49 பேரின் கதி என்ன..??