ரஷியா அதிரடியா ஒரு அறிவிப்பு வெளியிட்டு உலக அரசியல் களத்துல பரபரப்பை கிளப்பியிருக்கு. 500 முதல் 5,500 கி.மீ. தொலைவு வரை அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய இடைநிலை-தொலைதூர ஏவுகணைகளை தயார் நிலையில் வைக்க சுயமா விதிச்சிருந்த தடையை ரஷியா தூக்கியிருக்கு.
இதுக்கு காரணம், அமெரிக்காவும் அதோட நேட்டோ நட்பு நாடுகளும் ஐரோப்பாவுலயும் ஆசிய-பசிபிக் பகுதிகளுலயும் இதே மாதிரி ஏவுகணைகளை நிறுத்த திட்டமிடறது தான். குறிப்பா, 2026-ல இருந்து ஜெர்மனியில டைஃபூன், டார்க் ஈகிள் ஏவுகணைகளை அமெரிக்கா நிறுத்தப் போகுது. இது ரஷியாவுக்கு நேரடி அச்சுறுத்தல்னு மாஸ்கோ கடுப்புல இருக்கு.
ரஷிய வெளியுறவு அமைச்சகம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில, "அமெரிக்காவோட இந்த நகர்வு, ரஷியாவோட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மட்டுமில்ல, பிராந்திய, உலகளாவிய ஸ்திரத்தன்மையையும் குழப்புது,"னு காட்டமா சொல்லியிருக்கு.
இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யா விவகாரம்.. இந்தியாவின் கிடுக்கிப்பிடி கேள்வி.. பதிலளிக்க முடியாமல் மழுப்பும் டிரம்ப்..!
2019-ல அமெரிக்கா இன்டர்மீடியேட்-ரேஞ்ச் நியூக்ளியர் ஃபோர்ஸஸ் (INF) ஒப்பந்தத்தை உடைச்சதுக்கு பிறகு, ரஷியா தன்னோட இந்த ஏவுகணைகளை நிறுத்தறதுக்கு சுயமா தடை விதிச்சிருந்துச்சு. ஆனா, இப்போ அமெரிக்காவோட நடவடிக்கைகளைப் பார்த்து, "போதும், இனி தடையெல்லாம் கிடையாது,"னு ரஷியா முடிவு பண்ணிடுச்சு.
இதுக்கு பதிலடியா, ரஷியா தன்னோட அதிநவீன ஓரெஷ்னிக் ஏவுகணைகளை பெலாரஸ்ல நிறுத்த திட்டமிடுது. இந்த ஏவுகணை ஒலியை விட 10 மடங்கு வேகமா பறக்கக் கூடியது. உலகத்துல எந்த வான்பாதுகாப்பு அமைப்பாலயும் இதை இடைமறிக்க முடியாதுன்னு ரஷியா பெருமையா சொல்லுது.

2023-ல இந்த ஏவுகணையோட முதல் டெஸ்ட் நடந்தது, இப்போ 2025-ல தொடர் உற்பத்தி ஆரம்பமாகியிருக்கு. "இந்த ஓரெஷ்னிக் ஏவுகணை உலகத்துல வேற யார்கிட்டயும் இல்லை. இது எங்களோட பலம்,"னு புதின் தொலைக்காட்சி உரையில கூலா சொல்லியிருக்கார்.
இந்த முடிவு, அமெரிக்காவுக்கு செக் வைக்கற மாதிரி இருக்கு. 2023-ல இருந்து அமெரிக்கா, டென்மார்க், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியால தன்னோட ஏவுகணைகளை டெஸ்ட் பண்ணி, நிறுத்தி வருது. குறிப்பா, பிலிப்பைன்ஸ்ல டைஃபூன் ஏவுகணை அமைப்பு நிரந்தரமா நிறுத்தப்பட்டிருக்கு.
ஆஸ்திரேலியால PrSM ஏவுகணைகள் டெஸ்ட் பண்ணப்பட்டு, இதோட ரேஞ்ச் 1,000 கி.மீ-க்கு மேல போகும்னு சொல்றாங்க. இதெல்லாம் ரஷியாவோட எல்லையை ஒட்டியே நடக்குது. அதனால, "நீங்க இப்படி பண்ணா, நாங்க இப்படி பண்ணுவோம்,"னு புதின் களத்துல இறங்கியிருக்கார்.
இந்த விவகாரம், உக்ரைன்-ரஷ்யா போரோட பின்னணியில உலக அரசியலுக்கு புது திருப்பமா இருக்கு. புதின் இந்த முடிவு மூலமா, "நீங்க எவ்வளவு தூரம் போனாலும், நாங்க தப்ப விடமாட்டோம்,"னு அமெரிக்காவுக்கும் நேட்டோவுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கார்.
இதையும் படிங்க: உங்க மிரட்டலுக்கு எல்லாம் பணிய மாட்டோம்!! அமெரிக்காவுக்கு ரஷ்யா வார்னிங்!! அதிகரிக்கும் பதற்றம்..!