நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தமும் தோல்விலேயே முடிந்தது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுவதால் உக்ரைன் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.

இதனிடையே போரை நிறுத்தவில்லை எனில் ரஷியா மீதான பொருளாதார தடை மேலும் விரிவுபடுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டது. இதனையடுத்து போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது பேச்சுவார்த்தை முடியும் வரை தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியது.
இதையும் படிங்க: ட்ரம்ப் சொல்லுறது பொய்.. சண்டையை நிறுத்த கூறி பாக்., கெஞ்சியதாக ரஷ்யாவில் கனிமொழி THUG கமெண்ட்..!
ஆனால் ரஷிய அதிபர் புதின் அதனை நிராகரித்தார். இதனையடுத்து கடந்த வாரம் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் போரின்போது கைது செய்யப்பட்டவர்களை பரிமாற்றம் செய்ய ஒப்புக்கொண்டன. முதல்கட்டமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டனர். ஆனால் போர் நிறுத்தம் தொடர்பாக எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா மிகப்பெரிய அளவில் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரே நாளில் 250 ட்ரோன்கள் மற்றும் 14 பாலிஸ்டிக் ஏவுகணைகள் கீவை நோக்கி வீசப்பட்டதில் அங்குள்ள பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன. போர் தொடங்கியதிலிருந்து நகரத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். ஆறு ஏவுகணைகள் மற்றும் 245 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பதிவான வீடியோக்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீ விபத்துகள் ஏற்பட்டு புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. மேலும் குண்டுவெடிப்பு சத்தத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் ரயில் நிலையங்களில் உள்ள சுரங்கபாதைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்நிலையில் கீவை நோக்கி ரஷ்யா நடத்திய இந்த மிகப்பெரிய தாக்குதலில், இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
இதனிடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கீவ் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: ரஷ்யாவில் தரமான சம்பவம்.. பாக்., முகத்திரையை டார் டாராக கிழித்த கனிமொழி..!