சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வட இந்தியாவில் இதே நீட்டு தேர்வு எழுதும்போது புத்தகத்தை விரிச்சு வச்சு எல்லாரும் எழுதுறான். அந்த மேற்பார்வையாளர் என்ன பண்றாரு கதவுகிட்ட நின்னுகிட்டு யாராவது வர்றாங்களா என பார்க்கிறாரு. முழுக்கை போட்ட சுடிதாரனா அறக்கையா வெட்டுறா உள்ளாடையை எந்த எந்த மாநிலத்துல கழட்டுறா? என் பிள்ளையுடைய உள்ளாடையை கழட்ட நீ யாரு? எதுக்கு கழட்டற?. இந்த தோடுக்குள்ளையும். மூக்குலையும் நீ பிட்ட மறைச்சு கொண்டு போய் எழுதிட முடியும்னு நம்ப சொல்றாங்க. ஆனால் இந்த ஓட்டு போடுற பெட்டி இவ்வளவு பெரிய பெட்டிகளில் ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லுறங்க.

இத்தனை மாநிலங்கள் எழுதும்போது என் மாநிலத்துல மட்டும் இந்த துயரம் தொடருது. இந்த அமைச்சர் நாட்டையே கட்டி ஆளற பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், இந்த இருக்கிற முதலமைச்சர் இந்த அமைச்சர்களுக்குல்லாம் என்ன தேர்வு இருக்கு? சரி நீட்டு நீட்டை எழுதுறாங்க. இந்தியா முழுமைக்கும் மாணவர்கள் நீட்டு தேர்வு எழுதுறாங்க. என் மாநிலத்தில் மட்டும் ஏன் இந்த கொடுமை நடக்குது? இந்தியாவில் எந்த மாநிலத்தில என் பிள்ளைகளுடைய துப்பட்டாவை எடுக்கிறான்.
இதையும் படிங்க: உயிர்க்கொல்லி நீட் எப்போது ஒழியும்? என்ன திட்டம் வச்சு இருக்கீங்க? அன்புமணி கேள்வி..!

தலைமுடிய விரிச்சு விடுறான். முழுக்கை போட்ட சுடிதாரை அரைக்கையாக வெட்டுறாங்க. மூக்குத்தி, தோடு எவ்வளவு பெருசு இருக்கும். அறிவார்ந்த மக்கள் சிந்திச்சு பாருங்க இந்த மூக்குத்தி எவ்வளவு பெருசு அதுக்குள்ள பிட்டை கொண்டு போய் பார்த்த எழுதிட முடியும்னு நம்புதா இந்த சமூகம்?. அப்போ அங்க கண்காணிக்கிற சிசிடிவி கேமரா, மேற்பார்வையாளர் எல்லாம் ந்ன பண்ணிட்டு இருக்காங்க. பார்த்து எழுதும் போது பிடிக்க மாட்டாரா?

அரணாக்கொடி, பூணூலை எல்லாம் போட்டுக் சொல்கிறார்கள், ஆனால் தாலியை கழட்ட சொல்லுறாங்க. இது என்ன ஜனநாயக நாடா ?. இந்த நாட்டில் மட்டும் ஏன் விரும்பிய கல்வியை படிப்பது இவ்வளவு கஷ்டமான ஒன்றாக உள்ளட் என சீமான் சகட்டுமேனிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: நீட் ஒழிப்பு 'ரகசியத்தை' கண்டுபிடித்த திமுக... உதயநிதி குஷியோ குஷி..! தேர்தலுக்கு கிடைத்த துருப்புச் சீட்டு..!