காசாவில் உணவில்லாமல் உயிரை விடும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது காசாவில் உணவு விநியோகத்தை தொடங்கி இருந்தாலும், அது போதுமானதாக இல்லை எனத் தெரிவித்துள்ள ஐ.நா.வின் உலக உணவுத்திட்ட அமைப்பு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய காசாவின் எல்லைப் பகுதிகளில் தினமும் குறைந்தது 100 லாரிகளையாவது நிவாரண பொருட்களோடு அனுமதிக்க வேண்டும் என இஸ்ரேலிடம் அனுமதி கோரியுள்ளது.

இதனிடையே, காசாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் எலும்பும், தோலுமாக மெலித்து காணப்படுவதாகவும், அவர்களின் தாய்மார்கள் அவர்களுக்கு உணவளிக்க முடியாத அளவுக்கு ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பதாகவும் அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகியுள்ளன. காசாவில் உள்ள மருத்துவர்கள் அந்நாட்டின் தற்போதைய நிலையை வேகமாக ஆழமடைந்து வரும் மனிதாபிமான பேரழிவு என குறிப்பிட்டுள்ளனர். தி கார்டியன் செய்தியின்படி , பால்மாவிற்கு ஏற்பட்டுள்ள கடுமையான பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கான புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் வளர்ந்து வரும் குழந்தைகள் உடனடியாக இறக்கும் அபாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் மனிதாபிமான உதவிகள் நுழைவதற்கு "இஸ்ரேல்" தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருவதால், காசாவில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பட்டினியின் விளிம்பிற்கு தள்ளப்படுகிறார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: நிறுத்தாமல் எகிறி அடிக்கும் இஸ்ரேல்.. காசாவில் தொடர்ந்து கேட்கும் மரண ஓலம்..!
கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் குழந்தை மருத்துவத் தலைவர் டாக்டர் அஹ்மத் அல்-ஃபர்ரா, இங்கு நிலைமை எவ்வளவு மோசமானது என்பதை என்னால் விவரிக்கவே முடியவில்லை. எங்களிடம் ஒரு வாரத்திற்கு போதுமான பால் பால் உள்ளது. ஆனால் மருத்துவமனைக்கு வெளியேயும் குழந்தைகள் பால் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்” என வேதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உணவுக்காக காத்திருந்த அப்பாவி மக்கள்.. திடீரென கேட்ட துப்பாக்கிச் சூடு சத்தம்.. 56 பாலஸ்தீனர்கள் பலி..!