• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    சென்னையில் பெய்த திடீர் கனமழையால் 9 விமானங்கள் வானில் வட்டமடித்தன; சென்னை விமான நிலையத்தில் 20 விமானங்கள் தாமதமாகி பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
    Author By Thenmozhi Kumar Mon, 24 Aug 2026 22:29:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sudden Heavy Rain Disrupts Flight Operations at Chennai Airport; 20 Flights Delayed.

    சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று இரவு திடீரென வீசிய பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானச் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் புறநகர்ப் பகுதிகளில் இன்று இரவு சுமார் 7:45 மணி முதல் 8:15 மணி வரை திடீரென இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாகப் பார்வைத் திறன் குறைந்து ஓடுதளத்தில் கடுமையான வானிலை நிலவியதால், சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின. 

    Flight

    அந்த நேரத்தில் சென்னையில் தரையிறங்க வந்த துபாய், இலங்கை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், மைசூரு உள்ளிட்ட 9 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானிலேயே வட்டமடித்துத் தத்தளித்தன.

    இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் சூறைக்காற்றுடன் கனமழை: அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்!

    அதேபோல், சென்னையில் இருந்து புறப்படத் தயாராக இருந்த இலங்கை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம், திருச்சி, கோவை உள்ளிட்ட 11 விமானங்கள் உரிய நேரத்தில் புறப்பட முடியாமல் ஓடுதளத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் மழை மற்றும் சூறாவளிக் காற்றின் வேகம் குறைந்ததைத் தொடர்ந்து, வானில் வட்டமடித்த விமானங்கள் ஒவ்வொன்றாகப் பாதுகாப்பாகத் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன. 

    மேலும், புறப்பட வேண்டிய விமானங்களும் சுமார் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. அரை மணி நேரம் நீடித்த இந்தத் திடீர் கனமழையால் சென்னை விமான நிலையத்தில் வருகை மற்றும் புறப்பாடு என மொத்தம் 20 விமானங்கள் தாமதமாகி பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    இதையும் படிங்க: 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு!

    தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    சட்டசபை அனுமதியின்றி ரூ.2000 கோடி சாலைப் பணிகள்: எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார்!

    சட்டசபை அனுமதியின்றி ரூ.2000 கோடி சாலைப் பணிகள்: எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார்!

    தமிழ்நாடு
    துபாய் பறக்கும் முதல்வர் விஜய்: நடிகர் அஜித்துடன் திடீர் சந்திப்பு; லண்டனில் முதலீட்டாளர்கள் மாநாடு!

    துபாய் பறக்கும் முதல்வர் விஜய்: நடிகர் அஜித்துடன் திடீர் சந்திப்பு; லண்டனில் முதலீட்டாளர்கள் மாநாடு!

    தமிழ்நாடு
    20 மத்திய இணை அமைச்சர்களின் செயல்பாடுகள்: பிரதமர் மோடி 4 மணி நேரம் தீவிர ஆய்வு!

    20 மத்திய இணை அமைச்சர்களின் செயல்பாடுகள்: பிரதமர் மோடி 4 மணி நேரம் தீவிர ஆய்வு!

    தமிழ்நாடு
    தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம்: மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸ் குழு பங்கேற்பு!

    தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம்: மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸ் குழு பங்கேற்பு!

    தமிழ்நாடு
    பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா.. வீடுகள் ஒதுக்கீடு: அமைச்சர் ஜெகதீஸ்வரி கோரிக்கை!

    பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா.. வீடுகள் ஒதுக்கீடு: அமைச்சர் ஜெகதீஸ்வரி கோரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share