தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்தது. தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்கும் நடவடிக்கைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு புதிய உத்தரவை பிறப்பித்து இருந்தது. தெரு நாய்களுக்கு பொதுவெளியில் உணவளிக்கக்கூடாது என்றும் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் உணவளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. தெருநாய்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் பொருந்தக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த போவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
தெருக்களில் திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதியில் விடலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மிகவும் ஆக்ரோஷமான மற்றும் ரேபிஸ் நோய் பாதித்த நாய்கள் பிடிக்கப்பட்டால் மீண்டும் பொது வெளியில் விடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. தெரு நாய்கள் தொடர்பாக அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். தெரு நாய்களை கையாள்வது தொடர்பான நெறிமுறை உருவாக்க அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியது.

இந்த நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்காத மாநிலத்தின் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது எவ்வளவு தீவிரமான விஷயம் என்று உங்களுக்கு தெரியாதா என கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்த போதிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. பிரமாணபத்திரம் தாக்கல் செய்யாத மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சுப்ரீம் கோர்ட்டின் பட்டாசு உத்தரவு: வாழ்வுரிமையை விட வெடிப்புரிமை முக்கியமானதா? அமிதாப் காந்த் கடும் விமர்சனம்..!!
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் அடுத்த திங்கட்கிழமை ஆஜராக வேண்டும் என்றும் எதற்கு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்பதற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சிலர் தங்களுக்கு நோட்டீஸ் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், செய்திகளை படிப்பதில்லையா என்று கேள்வி எழுப்பியது. மேலும், நம் நாட்டின் நிலையை உலக நாடுகளுக்கு தெருநாய் கடி சம்பவங்கள் எடுத்துக்காட்டுவதாக உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஏமனில் கேரள நர்ஸ் தொடர்பான வழக்கு..!! மரண தண்டனை நிறுத்திவைப்பு.. உச்சநீதிமன்றத்தில் தகவல்..!!