கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தை விஜய் சென்னை வரவழைத்து சந்தித்த சம்பவத்தின் சூடே இதுவரை காயாத நிலையில், மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் மற்றொரு தரமான சம்பவத்தை அரங்கேற்றி விமர்சனங்களை வாரிக்குவித்திருக்கிறார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து 10 நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை வீடியோ கால் மூலம் சந்தித்த விஜய், கரூர் வந்து அனைவரையும் நேரில் சந்திப்பதாக உறுதியளித்தார்.
ஆனால் பாதுகாப்பு காரணங்களுகாக காவல்துறை விஜய் கரூர் செல்வதை அனுமதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து நேரில் சந்தித்து ஆறுதல் கூற விஜய் முடிவெடுத்தார் அதன்படி நேற்று கரூரில் இருந்து 5 பேருந்துகளில் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை சென்னை அழைத்து வந்த தவெக நிர்வாகிகள், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைத்தனர்.
இதையும் படிங்க: “விஜய் அரசியலுக்கு தகுதியற்றவர்” - கரூர் சம்பவம் குறித்து காட்டமாக விமர்சித்த கருணாஸ்...!
அவர்களை மாமல்லபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிக்கு இன்று காலை சென்ற விஜய், ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனி அறைகளில் சந்தித்து, அவர்களின் துயரத்தில் பங்கெடுத்து, அவர்களுக்கு தேவையான ஆறுதலையும் உறுதுணையையும் வழங்கியதாக கூறப்பட்டது.
ஆனால் விஜய்க்கு என அந்த ரிசார்ட்டில் தனி அறை புக் செய்யப்பட்டதாகவும், அந்த அறைக்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை தனித்தனியாக அழைத்து விஜய் பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது. கரூரில் இருந்து வந்தவர்களை நட்சத்திர விடுதியில் தனித்தனியாக தங்க வைத்துள்ளனர். அதில் ஒரு அறைக்கும் மற்றொரு அறைக்கும் 10 மீட்டர் இடைவெளி தான் இருக்கும், அதற்கு கூட செல்ல முடியாமல் அவர்களை வந்து தனது அறையில் சந்தித்து ஆறுதல் பெற்றுச் செல்ல விஜய் சொன்னது சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
Breaking news :
Vijan anna not going to visit the family rooms🤦🤦
TVK Tharkuri's arranged separate room for TVK vijay,one by one family members going to visit TVK vijay room🗣️💦@TVKVijayHQ kevalama seiyal thu .. pic.twitter.com/94WxZDYlD9
— crazyboy (@crazybo41240079) October 27, 2025
பாதிக்கப்பட்டவர்களை கரூர் சென்று நேரில் சந்திக்காது விஜய் மீது மிகப்பெரிய ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் சென்னை அழைத்து வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தன்னிடம் ஆறுதல் பெற்றுச் செல்ல கூறியது மட்டுமின்றி, அவர்களை அறைக்கே சென்று சந்திக்காமல், அவர்களை தனது அறைக்கு வந்து சந்திக்க வைக்கிறார். தவெகவிற்கு இப்படியொரு விளம்பரம் தேவையா? எதுக்கு இப்படியொரு மானம் கெட்ட பொழப்பு என்றெல்லாம் சோசியல் மீடியாவில் திமுக உள்ளிட்ட கட்சியினர் விஜயைக் கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்தச் சந்திப்பின் போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தங்களின் கோரிக்கைகளை விஜய்யிடம் முன்வைத்தனர். இந்தக் கோரிக்கைகள், எழுத்து வடிவில் கோப்புகளாகத் தயாரிக்கப்பட்டு விஜய்யிடம் வழங்கப்பட்டதாக தெரிகிறது. அந்த கோரிக்கைகளை விஜய் கவனமாக கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: என்னை மன்னித்து விடுங்கள்… பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்…!