ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற பாண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலியானோரின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் சிட்னியே அதிர வைத்துள்ளது.
ஆஸ்திரேலிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:45 மணிக்கு, ஹனுக்கா திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடைபெற்ற சானுகா பை தி சீ என்ற யூத நிகழ்வு நடைபெற்றது. அங்கு கூடியிருந்த ஏராளமான யூதர்கள் மீது கடற்கரையில் உள்ள ஒரு பாலத்தின் அருகே கருப்பு உடை அணிந்த இரண்டு ஆண்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனடியாக, மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தாக்குதலை நடத்திய இரண்டு நபர்களும் தந்தை மற்றும் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் காவல் ஆணையர் மால் லான்யோன், நவீத் அக்ரம் மற்றும் அவரது மகன் சஜித் அக்ரம் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நவீத் அக்ரம் சம்பவ இடத்திலேயே காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார், அதே நேரத்தில் சஜித் அக்ரம் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் தாக்குதல் பயங்கரவாதச் செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: ஆஸ்திரேலியாவில் பயங்கரம்... துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியான கொடூரம்... வலுக்கும் கண்டனம்...!
யூதர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், நவீத் அக்ரம் மற்றும் சஜித் அக்ரம் நீண்ட காலமாக சிட்னியில் வசித்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து வந்த அவர்களது குடும்பம், சிட்னியில் உள்ள போனிரிக் மற்றும் கேம்ப்சியின் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கிறது. விசாரணையின் ஒரு பகுதியாக, சிட்னியின் இந்த இரண்டு பகுதிகளிலும் இரவில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த நேரத்தில், நவீத் அக்ரம் உரிமம் பெற்ற ஆயுதங்களை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் நடவடிக்கைகளின் போது ஆறு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து பல சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார். சந்தேக நபர்களின் வாகனங்களில் ஒன்றில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களும் (IED) இருந்ததாக அவர் விளக்கினார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமெரிக்காவும் தலையிட்டுள்ளது. FBI விசாரணையில் ஈடுபடும். FBI இயக்குனர் காஷ் படேல் இதை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் கூறினார். டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.
இதையும் படிங்க: “எனக்கு ஓட்டு போடுங்க, போடாம போங்க... ஆனா...” - தமிழக மக்களை எச்சரித்த சீமான்...!