இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக ஐ.எஸ். பயங்கரவாதப் பின்னணி கொண்ட மருத்துவா் உள்பட மூவரை குஜராத் மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
உத்தரபிரதேசம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) நவம்பர் 9 தேதி, ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசாத் சுலேமான் ஷேக், லக்கிம்பூர் கேரியைச் சேர்ந்த முகமது சுஹைல் சலீம் கான் மற்றும் சீனாவில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற ஐதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் அகமது மொஹியுதீன் சயீத் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ரிசின் என்ற கொடிய விஷத்தை கோயில் பிரசாதங்களில் கலந்து கொத்து கொத்தாக மக்களை கொள்ள திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
அந்த வகையில், ஆமணக்கு விதைகளின் கழிவுப்பொருளில் இருந்து கிடைக்கும் மிக அதிக நச்சுத்தன்மை கொண்ட ‘ரிசின்’ என்ற ரசாயன விஷத்தைத் தயாரித்து, அதைக் கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு தேவையான ஆரம்ப கட்ட செயல்முறைகளைத் தொடங்கி, அதற்கான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருள்களையும் அவா் சேகரித்துள்ளாா்.
இதையும் படிங்க: அசாம் வரை எதிரொலிக்கும் டெல்லி கார்வெடிப்பு! தேசவிரோதிகளை தட்டித் தூக்கிய போலீஸ்!

லக்னோ மற்றும் டெல்லியில் உள்ள கோயில்களையும், ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களையும் குறி வைத்து உளவு பார்த்து இவர்கள், அங்கு வழங்கப்படும் பிரசாதத்தில் இந்த கொடிய விஷத்தை கலந்து பெருமளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் மூலமாக இந்தியாவில் பதற்றத்தை உருவாக்குவது மட்டுமின்றி சமூக நல்லிணக்கம், மக்களின் மத நம்பிக்கை ஆகியவற்றையும் உடைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.

குஜராத் ஏடிஎஸ் முதலில் அகமதாபாத்-மெஹ்சானா சாலையில் உள்ள அதலாஜ் சுங்கச்சாவடி அருகே அகமது மொஹியுதீன் சயீத்தை கைது செய்தது. அவரிடம் இருந்து இரண்டு க்ளாக் பிஸ்டல்கள், ஒரு பெரெட்டா பிஸ்டல், 30 லைவ் கார்ட்ரிட்ஜ்கள் மற்றும் விஷம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளான சுமார் 4 லிட்டர் ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.
சயீத்தின் செல்போன் தரவுகளை ஆராய்ந்த ஏடிஎஸ் குழு ஆசாத் சுலேமான் ஷேக் மற்றும் முகமது சுஹைல் சலீம் கானை கைது செய்தது. ஆசாத் மற்றும் சுஹைல் ஆகியோர் ஆன்லைனில் தீவிரவாத பயிற்சி பெற்றதாகவும், செல்போன் பயன்பாடுகள் மூலம் வீடியோ பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த இருவரும் ராஜஸ்தானின் அனுமன்கட் பகுதியில் பாகிஸ்தான் எல்லையிலிருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்களைக் கடத்தி, சையத்துக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு... நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... தீவிர சோதனை...!