கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம், தமிழ்நாட்டின் மிகப் பழமையான மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் ஒன்றாகும். திருப்பரங்குன்றம், மதுரைக்கு அருகே அமைந்துள்ள ஆறு படைவீடுகளில் முதலாவது படைவீடு. இங்கு முருகன் சுப்பிரமணிய சுவாமியாகக் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மலை உச்சியில் இயற்கையாகவே அமைந்துள்ள குகைக் கோயிலில் தெய்வானை அம்மையுடன் காட்சி தருகிறார். இந்த மலையின் உச்சியில் தான் ஒவ்வொரு கார்த்திகை மாத பௌர்ணமி அன்றும், குறிப்பாக கார்த்திகை தீபத் திருவிழாவின் பத்தாம் நாள் மாலையில் பெரும் சொக்கப்பனை தீபம் ஏற்றப்படுகிறது.
சிவபெருமான் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட முருகனின் ஜோதி வடிவமாகவும், அவரது அறுபடை வீடுகளில் முதலில் தோன்றிய அருள் ஒளியாகவும் போற்றப்படுகிறது. திருப்பரங்குன்றத்தின் மகா தீபம் ஏற்றப்படும் போது, அதே நேரத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருக்கும் பக்தர்களும் இதை நினைவில் கொண்டு வணங்குவர். ஏனெனில் இரண்டு தீபங்களும் ஒரே நேரத்தில் ஏற்றப்படுவது பழங்காலம் தொட்டு உள்ள மரபு.இன்றும் பல நூற்றாண்டுகளாக இடைவெளி இன்றி நடைபெற்று வரும் இந்தத் தீப ஒளி, முருகனின் அருள் மட்டுமல்ல, மனித மனங்களில் உள்ள இருளை அகற்றும் ஒளியாகவும் திகழ்கிறது.

கார்த்திகை மாத பௌர்ணமியில் திருப்பரங்குன்றம் மலை மீது எழுந்து நிற்கும் அந்த மாபெரும் தீபத்தை ஒருமுறையாவது கண்டு வணங்கினால், வாழ்வில் எல்லா வெளிச்சமும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி மறுத்தது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம்!! இந்து முன்னணி கையில் எடுக்கும் அஸ்திரம்! முருக பக்தர்களுக்கு அழைப்பு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின் போது யாரும் முறையாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. எனவே நீதிபதியே நேரடியாக சென்று மலை அடிவாரத்தில் அமர்ந்து விசாரணை நடத்தி உள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகளுடன் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: போதாது... தீபத் திருவிழாவுக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்டு வழக்கு... டிஜிபி பதிலளிக்க ஆணை...!