திருப்பூரில் அரசு உதவிபெறும் பள்ளியில் சாதிய கொடுமையால் 8ம் வகுப்பு மாணவரை சக மாணவர்கள் தீயில் தூக்கிவீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு இன்றும் பரவலாக இருக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை. இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாடு போன்ற முற்போக்கு என்று பேசப்படும் இடங்களில்கூட, குழந்தைகள் தங்கள் சாதியை மறைக்க முடியாமல், தினசரி அவமானங்களை எதிர்கொள்கின்றனர்.
இது வெறும் பெரியவர்களின் பிரச்சினை அல்ல. பள்ளி வளாகத்தில் தொடங்கி, குழந்தைகளின் மனதில் ஆழமாக வேரூன்றிவிடுகிறது. பள்ளிக்கு வரும் சிறு வயது மாணவர்களே இதை உணரத் தொடங்கிவிடுகின்றனர். வகுப்பறையில் இருக்கை ஏற்பாடு செய்யும்போது கூட பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

மேலும் இதில் கொடுமை என்னவென்றால், சில சமயங்களில் இந்த பாகுபாடு வன்முறையாக மாறுவது. நாங்குநேரி போன்ற சம்பவங்கள் அதற்கு உதாரணம். சாதி பெயரால் தகராறு, அடி உதை, கூட காயம்பட்டு உயிரிழப்பு வரை நீள்வது வருத்தமான உண்மை. இதனால் பல மாணவர்கள் பள்ளியை விட்டு நடுவிலேயே நிறுத்திவிடுகின்றனர்.
இதையும் படிங்க: “மீண்டு வந்த சோனியா!” மருத்துவமனையிலிருந்து அனுமதிக்கப்பட்டிருந்து டிஸ்சார்ஜ்! காங்கிரஸ் தொண்டர்கள் நிம்மதி
இந்த நிலையில் திருப்பூரில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் சாதிய கொடுமையால் 8ம் வகுப்பு மாணவரை சக மாணவர்கள் தீயில் தூக்கிவீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீக்காயமடைந்த மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயில் வீசிய சக மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாணவரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: "நூறைக் கடந்தும் தளராத நம்பிக்கை!" மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் நல்லகண்ணு!