அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், தேர்தல் முறையில் பெரும் சீர்த்திருத்தங்களை கோரி உள்ளார். அமெரிக்காவில் நடந்த தேர்தல்களில் வாக்கெடுப்பின் போது மோசடிகள் நடந்ததாகவும், அவற்றை சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்காக 3 கடுமையான விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
டிரம்ப் தனது அறிக்கையில் கூறியதாவது: “அமெரிக்க தேர்தல்களில் வாக்குகள் திருடப்பட்டன, மோசடி செய்யப்பட்டன. நாம் அவற்றை சரிசெய்ய போகிறோம். தேர்தல் சீர்த்திருத்தங்கள், கடுமையான கட்டுப்பாடுகள் தேவை. சில சந்தர்ப்பங்களைத் தவிர, வாக்காளர்கள் பதிவு செய்ய அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்.
அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையை காட்ட வேண்டும். மெயிலில் இனி வாக்கு சீட்டுகள் இல்லை. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ராணுவத்தினர் தவிர மற்ற யாருக்கும் வாக்கு சீட்டு முறையில் ஓட்டளிக்க கூடாது. இந்த நடைமுறைகளை அனைத்து குடியரசு கட்சியினரும் பின்பற்றுவதற்காக போராடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அமெரிக்காவை காப்பாற்றுங்கள்.”
இதையும் படிங்க: ஜப்பானில் சரித்திர வெற்றி! அமெரிக்கா வாங்க!! பிரதமர் சனே தகாய்ச்சிக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு!

இந்த கோரிக்கை அமெரிக்க அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் ஆட்சியில் தேர்தல் முறையில் மோசடிகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு சாட்டி வரும் நிலையில், இந்த சீர்த்திருத்தங்கள் அவரது அதிகாரத்தை வலுப்படுத்தும் வகையில் இருக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. வாக்காளர் அடையாளம், குடியுரிமை ஆதாரம், மெயில் வாக்குகள் தடை போன்றவை அமெரிக்க தேர்தல் முறையை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், டிரம்ப் தனது மற்றொரு பதிவில் இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை குறிப்பிட்டுள்ளார். “இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருக்கிறது என்று இப்போது கேள்விப்பட்டேன். அமெரிக்க அணிக்கு வாழ்த்துக்கள். எங்களிடம் மிகவும் வலுவான அணி உள்ளது. அமெரிக்கா உங்களுக்காக காத்திருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பின் இந்த கருத்துகள் அமெரிக்க உள்நாட்டு அரசியலையும், சர்வதேச உறவுகளையும் பாதிக்கும் வகையில் உள்ளன. தேர்தல் சீர்த்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டால், அமெரிக்காவின் ஜனநாயகம் புதிய திருப்பத்தை சந்திக்கும்.
இதையும் படிங்க: சிக்கந்தர் தர்காவில் தொழுகை.. வருஷத்துக்கு 2 முறை தான்..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!