டிரம்ப் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பல்வேறு விஷயங்கள் டிரெண்டாகும். ஆனால் திடீரென டிரம்பின் உடல்நலம் குறித்த பதிவுகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்க தொடங்கி இருக்கின்றன. டிரம்பின் கைகளில் காயங்கள் இருப்பதை காட்டக்கூடிய சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியுள்ளன. கடந்த சில தினங்களாக டிரம்ப் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்த நிலையில் டிரம்ப் இறந்துவிட்டார் என நெட்டிசன்கள் பகிர தொடங்கினர். 50,000க்கும் மேற்பட்ட பதிவுகள் பகிரப்பட்ட நிலையில், இது 79 வயதான டிரம்பின் உடல் நிலை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
போதாக்குறைக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வேறு எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்பட்டால் பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக இருப்பதாக சமீபத்தில் பேட்டி அளித்திருந்தது அனைவருக்கும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆகஸ்ட் 30 முதல் 31 ஆகிய தேதிகளில் டிரம்ப் எந்தவித நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை, யாரையும் சந்திக்கவில்லை. இவ்வளவு ஏன்? உலகமே ஷாங்காய் உச்சி மாநாட்டை உற்று நோக்கிக் கொண்டிருக்கும்போது, டிரம்ப் கடந்த 24 மணி நேரமாக சோசியல் மீடியா பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை என நெட்டிசன்கள் விதவிதமாக ஆதாரங்களை வெளியிட்டு வந்தனர்.
TRUMP IS DEAD, TRUMP DIED போன்ற ஹேஷ்டேக்குகள் வேறு உலக அளவில் ட்ரெண்டாகி வருகின்றன. ஆனால் இது முற்றிலும் வதந்தி என்றும், டிரம்ப் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உலக அரசியலையே புரட்டிப்போட்ட சம்பவம்... ஜப்பானில் மோடி கால் வைத்த அடுத்த நொடியே ஆட்டம் கண்ட வல்லரசு...!
டிரம்ப் ஆதரவாளரும் பிரபல அரசியல் விமர்சகருமான டி.சி. டிரைனோ ஒரு படி மேலே போய் அமெரிக்க மக்களை வசை பாடியுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் மக்கள் பார்வையிலேயே படமாட்டார். ஆனால் அவர் சுறுசுறுப்பாக இயங்கி வருவதாக ஊடகங்களும், சோசியல் மீடியாக்களும் புகழ்ந்து தள்ளின. உண்மையில் அவர் டயப்பர்களை அணிந்து கொண்டு தான் உறக்கச் செல்கிறார். அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஆனால் டிரம்பை 24 மணி நேரம் காணவில்லை என்றால், ஊடகங்கள் இஷ்டத்திற்கு பேச ஆரம்பித்துவிடுகின்றன. என்ன மாதிரியான இரட்டை மனநிலை இது என வெளுத்து வாங்கியுள்ளார்.
இந்த சூழலில், டிரம்ப் சனிக்கிழமை கோல்ஃப் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டு, தான் ஆரோக்கியமாக இருப்பதாக அனைவருக்கும் கூறினார். ஆனால் இது சில சமூக ஊடக பயனர்களால் 'போலி' என்றும் நிராகரிக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, டிரம்ப் ஒரு வாக்கியத்தில் பதிலளித்தார், "நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் ஆரோக்கியமாக இருந்ததில்லை." என தனது ட்ரூத் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளார். இதன் மூலம் டிரம்ப் ஆரோக்கியமாக தான் இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: தினமும் ரூ.700 கோடி வரை இழப்பு - ட்ரம்ப் அறிவிப்பால் திணறும் திருப்பூர்... பின்னலாடை உற்பத்தியாளர்கள் வேதனை...!