அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபரின் நான்கு ஆண்டுகால பதவிக் காலத்தின் நடுப்பகுதியில் இந்தத் தேர்தல் நடத்தப்படுவதால் இது இடைக்காலத் தேர்தல் என அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்தலை முன்னிட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வாக்காளர் மோசடி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த தேர்தல்கள் மற்றும் வரவிருக்கும் 2026 இடைக்காலத் தேர்தலில் நடக்கும் வாக்காளர் மோசடிகளை ஆதாரத்துடன் தெரிவிப்பவர்களுக்கு 10 லட்சம் டாலர் (சுமார் 9.49 கோடி ரூபாய்) வெகுமதி வழங்கப்படும் என அவர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
வெறும் தகவலை மட்டும் தெரிவித்தால் இந்தப் பணம் கிடைக்காது. அந்தத் தகவலின் அடிப்படையில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற வேண்டும் என அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்த முறையும் கிடைக்கல!! அமைதிக்கான நோபல் பரிசு சர்ச்சை: நார்வே மீதும் பரிசுக் குழு மீதும் டிரம்ப் தாக்கு!

இந்தப் பரிசுத் தொகை அரசு நிதியிலிருந்து வழங்கப்படுமா அல்லது தனிப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்படுமா என்ற அதிகாரப்பூர்வ விவரங்களை அதிபர் தனது பதிவில் குறிப்பிடவில்லை. வெள்ளை மாளிகை அதிகாரிகளும் கூடுதல் விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.
இந்த அறிவிப்பு இடைக்காலத் தேர்தலுக்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன் வந்துள்ளது. அமெரிக்காவில் காங்கிரஸின் இரு அவைகளிலும் கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கும் முக்கியத் தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்த முறையாவது கிடைக்குமா நோபல்?! 8 போரை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் மீண்டும் சுயதம்பட்டம்!