அமெரிக்க அதிபரா ஜனவரி 2025-ல பதவியேத்த டொனால்டு ட்ரம்ப், ஆரம்பிச்ச உடனே அதிரடி காட்ட ஆரம்பிச்சுட்டார். பல நாடுகளுக்கு இறக்குமதி வரியை உயர்த்தி, உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி பண்ணார். ஆனா, மூணு வருஷமா நடக்குற இந்த போரை நிறுத்த முடியாம, ட்ரம்ப் கடுப்பாகி, ரஷ்யா மேல பொருளாதாரத் தடைகளை விதிச்சார்.
“50 நாளுக்குள்ள உக்ரைன் மேல தாக்குதலை நிறுத்தலைனா, இன்னும் கடுமையான தடைகள் வரும்”னு மிரட்டினார். இந்தியா, சீனா மாதிரி ரஷ்யாவோட வர்த்தகம் பண்ணுற நாடுகளுக்கும் கூடுதல் வரி போடுவேன்னு சொன்னார். இதோட, “இந்தியாவும் ரஷ்யாவும் இறந்த பொருளாதாரங்கள்”னு கடுமையா விமர்சிச்சார்.
இதுக்கு பதிலடியா, ரஷ்ய முன்னாள் அதிபரும், இப்போ பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான , X-ல ஒரு பதிவு போட்டு ட்ரம்பை எச்சரிச்சார். “ரஷ்யா இஸ்ரேலோ, ஈரானோ இல்ல. ஒவ்வொரு மிரட்டலும் போருக்கு வழி. ட்ரம்ப் ‘தி வாக்கிங் டெட்’ படம் பத்தி பேசுறாரோனு நினைக்கிறேன்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு சலுகை காட்டும் ட்ரம்ப்.. 29-ல் இருந்து 19%-ஆக குறைந்த வரி..
ஆனா, ‘டெட் ஹேண்ட்’ எவ்வளவு ஆபத்துனு மறந்துட்டார்”னு கூறினார். இந்த ‘டெட் ஹேண்ட்’னு பனிப்போர் காலத்துல ரஷ்யா உருவாக்கின அணு ஆயுத அமைப்பு, ரஷ்ய தலைவர்கள் இல்லாம போனாலும் தானாகவே அமெரிக்காவை தாக்குற மாதிரி வடிவமைக்கப்பட்டது. இது இன்னும் செயல்பாட்டுல இருக்கு.

மெட்வெடேவோட இந்த மிரட்டல் ட்ரம்பை உச்சபட்ச கோபத்துக்கு இழுத்துடுச்சு. உடனே, ரஷ்யாவை நோக்கி அணு ஆயுதம் தாங்கிய இரண்டு நீர்மூழ்கி கப்பல்களை அனுப்ப உத்தரவு போட்டார். தன்னோட ட்ரூத் சோஷியல் பக்கத்துல, “மெட்வெடேவோட முட்டாள்தனமான, ஆத்திரமூட்டுற பேச்சுக்கு பதிலடியா இந்த கப்பல்களை நிலைநிறுத்த உத்தரவு போட்டிருக்கேன்.
வார்த்தைகள் ரொம்ப முக்கியம். இது தேவையில்லாத விளைவுகளை ஏற்படுத்தாம இருக்கும்னு நம்பறேன்”னு எழுதினார். இந்த கப்பல்கள் அணு ஆயுதம் தாங்கியவையானு, இல்ல அணு சக்தியில் இயங்குறவையானு தெளிவா சொல்லல. ஆனா, இந்த உத்தரவு உலக அரங்கில் பதற்றத்தை கிளப்பியிருக்கு.
ரஷ்யாவும் இதுக்கு பதிலடி கொடுத்திருக்கு. ரஷ்ய எம்.பி. விக்டர் வடலொட்ஸ்கெ, “அமெரிக்காவோட அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை விட, ரஷ்யாவோட கப்பல்கள் எண்ணிக்கையில அதிகம். ட்ரம்போட கப்பல்கள் எங்க இருக்கு, என்ன பண்ணுதுனு எங்களுக்கு தெரியும். இதுக்கு பதிலடியா நாங்க கப்பல்களை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை”னு கூறியிருக்கார். இது ஒரு முழு அளவு அணு ஆயுத மோதலுக்கு வழிவகுக்குமோனு உலகமே கவலைப்படுது.
ட்ரம்போட இந்த முடிவு, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறதோட ஒரு பகுதி. ஆனா, மெட்வெடேவோட வார்த்தைகளும், ட்ரம்போட பதிலடியும் இந்த பதற்றத்தை இன்னும் அதிகமாக்கியிருக்கு. இந்தியா இப்போ ரஷ்யாவோட எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியிருக்கறதும், இந்த புது அணு ஆயுத மிரட்டலும் உலக பொருளாதாரத்தையும், அரசியல் சூழலையும் எப்படி பாதிக்கும்னு பாக்கணும். இப்போதைக்கு, இந்த வார்த்தைப் போர் உலகத்தை ஒரு பதட்டமான நிலையில வச்சிருக்கு.
இதையும் படிங்க: டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியல்.. முதலிடத்தில் நீடிக்கும் எலான் மஸ்க்.. தலைசுற்றும் சொத்து மதிப்பு!!