இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரின் துல்லிய தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் போரின் விளிம்பிற்குச் சென்றதால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கிரனா மலை ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் கீழ், இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானுக்குள் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பையும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரையும் குறிவைத்தன. 
பாகிஸ்தான் அத்துமீறி தாக்க முற்பட்டதால் இந்தியா அந்நாட்டின் பயங்கரவாத முகாம்களின் மீதும் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள 11 விமானப்படைத் தளங்களை அழிப்பதன் மூலம் இந்தியா தன் வலிமையை உயர்த்தியது. இது பாகிஸ்தான் விமானப்படையின் உள்கட்டமைப்பிற்கு குந்தகம் விளைவித்தது.
பாகிஸ்தான் விமானப்படைத் தளங்கள் மீதான இந்தியத் தாக்குதல்களுக்கு இடையே, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பதிலடி நடவடிக்கைகளின் இலக்குகளில் ஒன்றாக கிரானா மலைகள் மாறிவிட்டதாகக் கூறப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: டிரம்பின் பாகிஸ்தான் பாசம்..! மோடியை வெறுப்பேற்றும் அமெரிக்கா..! முனீரின் மரண வேட்டை..!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள கிரானா மலைகள், பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்துக்கு பல்லாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் தனது அணுசக்தி நிலையத்தை வலுப்படுத்தவும், அணு ஆயுதங்களை சேமிக்கவும் இந்த மலைகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. 1980களில் பாகிஸ்தான் பதுங்கு குழிகள், நிலத்தடி சுரங்கப்பாதைகளை உருவாக்கியது. அதன் மூலம் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை கிரானா மலைகளில் மறைக்கப் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கிரானா மலைகள் பற்றிய தகவல்களை பாகிஸ்தான் வெளியிடுவதைத் தவிர்ப்பதால், அந்த இடம் 'ஏரியா 51' என்று ரகசிய குறியீடுடன் அழைக்கப்படுகிறது. இது அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான ரகசிய உள்கட்டமைப்பு. ஏரியா 51, விண்வெளி ஆராய்ச்சி உட்பட பல நடவடிக்கைகளுடன் தொடர்புடையது. அமெரிக்கா அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் மற்றும் வேற்றுகிரகவாசிகளை மறைத்து இங்கு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த மலை ரகசியம் வெளியானால் சீனாவுடன் அமெரிக்காவுக்கு உள்ள தொடர்புகளும் வெளியாகலாம். இந்தத் தகவல்கள் இன்னும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை.

பாகிஸ்தானுக்கு கிரானா மலைகளின் முக்கியத்தும், அந்நாடு அணு ஆயுதங்களை சேமிப்பதற்கும், ஏவுகணை அமைப்புகளை உருவாக்குவதற்கும் இங்கு உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இந்தியாவிற்கு எதிரான அணு ஆயுத அச்சுறுத்தலின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் பெரும்பாலும் பயன்படுத்தும் அணுசக்தி மீதான பாகிஸ்தானின் வெறியை இந்த கிரானா மலை பகுதி எடுத்துக்காட்டுகிறது.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நாட்டிற்கு ஆற்றிய முதல் உரையில், பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்தார். ''பயங்கரவாதமும் வர்த்தகமும், பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது'' என்ற தெளிவாக கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவிற்குள் பாகிஸ்தானின் 'ஆண்குறி'..! விசிகவினரின் வக்கிரபுத்தி..! கொதித்தெழும் தேச பற்றாளர்கள்..!