ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு, அந்நாட்டு வழக்கப்படி தலைவரி கோலமாக பெண்கள் வந்து நடனமாடியதைப் பார்த்த அதிபர் ட்ரம்ப் சற்று அதிர்ச்சியடைந்தார். ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் பாரம்பரிய அல்-அயாலா நடனத்தை பெண்கள் ஆடி அதிபர் ட்ரம்புக்கு அரண்மனையில் வரவேற்பு அளித்தனர். அதிபர் ட்ரம்பை அந்நாட்டு அதிபர் முகமது பின் ஜயத் அல் நயான் வரவேற்று அளித்தார்.

பெண்கள் வெள்ளை நிற கவுன் அணிந்து, தலைவரிகோலமாக வரிசையாக இரு பக்கமும் 20 பேர் நின்று தலைகுணிந்து தலைமுடியை அசைத்து அசைத்து அல்-அயாலா நடனம் ஆடினர். இந்த நடனத்துக்கு ஏற்றார்போல் இசைக்கருவிகளும் இசைக்கப்பட்டன. ஆண்கள் கத்தி போன்ற பொருளை கையில் வைத்து போருக்கு செல்வதுபோன்று பெண்களுக்கு பின் நின்றிருப்பார்கள். தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தவம், விருந்தினருக்கு பாரம்பரிய மரியாதை அளித்து நடனமாடி வரவேற்பு அளித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.
இதையும் படிங்க: அதிபர் ட்ரம்ப் vs ஹார்வார்ட் பல்கலை. மோதல் முற்றுகிறது.. வரிச்சலுகை ரத்தாகும் என மிரட்டல்..!

அல்-அயலா நடனம் என்றால் என்ன? முக்கியத்துவம் என்ன?
ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் பாரம்பரியமாக பெண்களால் நடமானப்படுவது அல்-அயாலா நடனமாகும். 2014ம் ஆண்டு இந்த நடனத்தை மனிதர்களின் கலாச்சார அடையாளமான யுனெஸ்கோ அங்கீகரித்தது. அல்-அயாலா நடனத்தின்போது, பாடல் பாடுவது, ட்ரம் இசைத்தல் ஆகியவை இருக்கும். ஆண்கள், பெண்கள் என 20 பேர் வரிசையாக நின்று நடனமாடுவார்கல். ஆண்கள் மூங்கில் பிரம்புகளையும், கத்தியையும வைத்து ஆடுவார்கள். பெண் நீண்ட கூந்தலை கழற்றிவிட்டு, விருந்தினர் வரும்போது தலைகவிழ்ந்து தலைமுடியை அங்கும், இங்கும் அசைத்து நடனமாடுவார்கள்.

எப்போது அல்-அயாலா நடனம் நடக்கும்?
ஐக்கிய அரபுஅமீரகம், ஓமன் நாடுகளில் வீடுகளில் திருமணம், திருவிழாக்கள், பண்டிகைகள், விடுமுறை நாட்களில் இந்த அல்-அயாலா நடனம் ஆடப்படுகிறது. தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு தேசிய அடையாளம், ஒருங்கிணைப்பு, ஆகியவற்றை வெளிப்படுத்தி, வயது வேறுபாடின்றி ஆடப்படும் நடனமாகும். எதிர்கால சந்ததியினருக்கு இந்த நடனத்தை கடத்த வேண்டும்,

ஐக்கிய அரபு அமீரக்துக்கு அதிபர் ட்ரம்ப் ஏன் சென்றார்?
மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரி்க்க அதிபர் ட்ரம்ப் வந்துள்ளார். சவுதி அரேபியா கத்தார் நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் செல்கிறார். 14200 கோடி டாலர் மதிப்பில் அமெரிக்கா, சவுதி அரேபியா இணைந்து பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவில் 60000 கோடி டாலரை முதலீடு செய்யவும் ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் ஐ-போனை அளவா தயார் பண்ணுங்க..! ஆப்பிள் நிறுவனர் டிம் குக்கிற்கு அதிபர் ட்ரம்ப் அறிவுரை..!