அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற நாள் முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தினார். அதில் இந்தியர்கள் 300க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதனிடையே டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இருந்தபோதிலும் டிரம்ப் நாடு கடத்துவதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே கியூபா, ஹைட்டி, நிகரகுவா மற்றும் வெனிசுலா ஆகிய நாட்டை சேர்ந்தவர்களின் சட்டப் பாதுகாப்பை ரத்து செய்யப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தார். மேலும் அவர்களை ஒரு மாதத்தில் நாடுகடத்த போவதாகவும் தெரிவித்தார். இதன்மூலம் சுமார் 5 லட்சத்து 32 ஆயிரம் பேர் உள்ளனர் நாடு கடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. நூற்றுக்கணக்கான இந்தியர்களும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். அதுபோக தேர்தல் பிரசாரத்தில் தனக்கு பக்க பலமாக இருந்த எலான் மஸ்க்கிற்கு டாட்ஜ் எனப்படும் செலவின கட்டுப்பாட்டு துறை தலைவர் பொறுப்பை கொடுத்தார்.

எலான் மஸ்க்கும் பல்வேறு துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை அமெரிக்கர்களுக்கே அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்து இருந்தது. குறிப்பாக பரஸ்பர விரி விதிப்பு விவகாரத்தில் டிரம்பிற்கு எதிராக பெரும் போராட்டம் அமெரிக்காவில் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் ஐடி துறை தொடங்கி ஆட்டோமொபைல் துறை வரை பல துறைகள் இந்தியாவில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
அதில் முக்கியமாக இந்தியாவில் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம் வரியை எதிர்கொள்கிறது. இந்த வரிகள் எல்லாம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில்தான் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: வர்த்தகத்தை பற்றி பேசவே இல்லை... ட்ரம்ப் கருத்தை அதிகாரப்பூர்வமாக மறுக்கும் இந்தியா!!

இதை டிரம்ப் தடுக்கும் பட்சத்தில் அது இந்தியாவிற்கு பெரிய சிக்கலாக மாறும். உதாரணமாக ஐபோன் ஏற்றுமதி காரணமாக தமிழகத்தின் ஏற்றுமதி முதன்முறையாக இந்த முறை 50 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது இது 9 பில்லியன் டாலர் கூடுதல் ஆகும். இதன் மூலம் இந்தியாவில் எந்த பெரிய மாநிலத்திலும் இல்லாத அதிகபட்ச உயர்வை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது. 24-25 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் மொத்தப் பங்கு 13.38% ஆக உள்ளது.
இந்த முறை $52.073 பில்லியன் மதிப்புள்ள வணிகப் பொருட்களை மாநிலம் ஏற்றுமதி செய்தது. கடந்த ஆண்டு தமிழ்நாடு 43.56 பில்லியன் டாலர் செய்தது. அதாவது தமிழ்நாடு அரசு 9 பில்லியன் டாலர் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2025 நிதியாண்டில் இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 41.2% பங்களித்தது. தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாறி உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டாம் என ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் கூக்கிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்த அவரது எச்சரிக்கையில், நேற்று டிம் கூக் உடன் எனக்கு ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டது. நான் அவரிடம் சொன்னேன், நீங்கள் என் ஃப்ரெண்ட், நான் உங்களை ரொம்ப நன்றாக நடத்துகிறேன். ஆனால் நீங்கள் பல பில்லியனை இந்தியாவில் முதலீடு செய்கிறீர்கள். இப்போ இந்தியா முழுக்க கட்டிடம் கட்டுவதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் கட்டிடம் கட்டுவதை நான் விரும்பவில்லை.
இந்தியாவை கவனித்துக் கொள்ள விரும்பினால், நீங்க இந்தியாவில் கட்டிடம் கட்டலாம். ஆனால் நீங்கள் அமெரிக்க நிறுவனம். இந்தியாவில் கட்டிடம் கட்ட கூடாது. ஏனென்றால் இந்தியா உலகத்துலயே அதிக வரி விதிக்கிற நாடுகளில் ஒன்று. அதனால் இந்தியாவில் உங்கள் பொருட்களை விற்பது ரொம்ப கஷ்டம். நீங்க பல வருஷமாக சீனாவில் கட்டிய எல்லா பிளாண்ட்களையும் நாங்க பொறுத்துக்கிறோம். ஆனால் இப்போது நீங்க இந்தியாவில் கட்டுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளட்டும்.. நீங்கள் அமெரிக்காவை பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இதை பயன்படுத்தி தான் அணு ஆயுதப் போரையே நிறுத்தினேன்..! டிரம்ப் சொன்ன சீக்ரெட்..!