அமெரிக்க அதிபரான பின்னர் டிரம்ப் செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார். பல்வேறு அரசு துறைகளில் இருக்கும் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்க உச்ச நீதிமன்றம், நேற்று டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கல்வித்துறையில் (U.S. Department of Education) 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அனுமதிக்கும் 6-3 தீர்ப்பை வழங்கி உள்ளது. குறிப்பாக இது, மாஸசூசெட்ஸ் மாவட்ட நீதிபதி மியோங் ஜவுன் விதித்த தடையை நீக்கியது.
கடந்த மார்ச் மார்ச் மாதம் தொடங்கிய இந்த பணிநீக்கங்கள், அதுசார்ந்த துறையை “முடக்கிவிடும்” என்று கூறியிருந்தார். இந்தத் தீர்ப்பு, ட்ரம்பின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான கல்வித்துறையை கலைப்பதற்கு வழிவகுக்கிறது. இது 1979-ல் ஜிம்மி கார்ட்டரால் நிறுவப்பட்டது என்றார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அரசு செலவுகளைக் குறைக்கவும், “தேவையற்ற” திட்டங்களை நீக்கவும், பிப்ரவரியில் ஒரு நிர்வாக உத்தரவு மூலம் பல துறைகளில் பெருமளவு பணிநீக்கங்களை அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக, கல்வித்துறையில் 4,100 ஊழியர்களில் 1,378 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இது துறையின் மாணவர் கடன் மேலாண்மை ($1.6 ட்ரில்லியன்), சிறப்பு கல்வி, மற்றும் பள்ளிகளில் சிவில் உரிமைகள் அமலாக்கத்தை பாதிக்கிறது.
இதையும் படிங்க: எங்கள காப்பத்துங்க! ஜன்னலை பிடித்தபடி கதறிய முதியோர்!! உடல்கருகி 9 பேர் இறந்த சோகம்!!
மேலும், விவசாயம், வர்த்தகம், ஆற்றல், உள்துறை, மற்றும் வீரர்கள் நலத்துறை உள்ளிட்ட 17 துறைகளில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிநீக்கப்பட்டனர். இந்த முயற்சிகளை, எலான் மஸ்க் தலைமையிலான “Department of Government Efficiency” (DOGE) மேற்பார்வையிட்டது, ஆனால் மஸ்க் பின்னர் பதவி விலகினார்.

இந்த நிலையில் 20 மாநிலங்களில் அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பு (AFT), மற்றும் பள்ளி மாவட்டங்கள், இந்த பணிநீக்கங்கள் சட்டவிரோதமானவை என்று வழக்கு தொடர்ந்தன. மே 22-ல், நீதிபதி ஜவுன், இந்த பணிநீக்கங்கள் துறையை செயலிழக்கச் செய்யும் என்று தடை விதித்தார். ஆனால், உச்ச நீதிமன்றம், ஜவுனின் தடையை நீக்கி, வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் தொடர அனுமதித்தது. சோட்டோமயர், இந்த முடிவு “நிர்வாகத்திற்கு சட்டங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை அளிக்கிறது” என்று கூறினார்.
ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், இந்தத் தீர்ப்பை “பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு முக்கிய வெற்றி” என்று வர்ணித்தார். மேலும் கல்வித்துறையின் பணிகளை “மாநிலங்களுக்கு திருப்பி அளிக்கும்” முக்கிய செயல்முறையை தொடங்குவதாகக் கூறினார்.
கல்வித்துறை செயலர் லிண்டா மக்மஹோன், “இந்த முடிவு மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு முக்கிய வெற்றி” என்று கூறி, உச்ச நீதிமன்றத்தின் தலையீடு தேவைப்பட்டது “வெட்கக்கேடு” என்றார். “நிர்வாகத்திற்கு ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் துறையின் அமைப்பு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது,” என்று அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த பணிநீக்கங்கள், கல்வி ஆராய்ச்சி, மாணவர் கடன் மேலாண்மை, மற்றும் பள்ளிகளில் சிவில் உரிமைகள் அமலாக்கத்தை பாதிக்கும். டெமாக்ரசி ஃபார்வர்டு தலைவர் ஸ்கை பெர்ரிமன், இந்த முடிவு “பொது கல்விக்கு பேரழிவு” என்று கண்டித்தார், மேலும் வழக்கு தொடர்ந்து நடத்தப்படும் என்றார். 21 டெமாக்ரடிக் மாநில வழக்கறிஞர்கள், இந்த முடிவு சட்டவிரோதமானது என்று வாதிட்டனர், குறிப்பாக துறையின் சட்டப்பூர்வ பொறுப்புகளை நிறைவேற்ற முடியாமல் போகும் என்று கூறினர்.
இதையும் படிங்க: போர் நிறுத்தம் ஒரு போங்கு!! நாங்க எதுக்கும் தயார்!! ஈரான் பேச்சால் அதிகரிக்கும் பதற்றம்!!