லாஸ் வேகாஸைச் சேர்ந்த Agrippa நிறுவனத்தின் CEO பிளேக் ஓவன்ஸுக்கு, மர்மமான முறையில் ஒரு பார்சலில் இரத்தம் தோய்ந்த பன்றியின் தலை மற்றும் அச்சுறுத்தும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பார்சல், ஓவன்ஸின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தது. இது, ஜூன் மாதம் KLAS தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ஓவன்ஸின் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் மேற்கொண்டது குறித்த நேர்காணலுக்கு எதிர்வினையாக அனுப்பப்பட்டதாகக் கருதப்படுகிறது.

கடிதத்தில், “AI ரியல் எஸ்டேட் தரகர்களை மாற்றாது” என்றும், ஓவன்ஸை “கிளார்க் கென்ட் நகல்” என்று அவமதித்து, “பன்றிகள் பருமனாகி, ஆடுகள் அறுக்கப்படுவார்கள்” என்று அச்சுறுத்தலாக முடித்து, ‘M’ என்ற முதல் எழுத்தில் கையொப்பமிடப்பட்டிருந்தது. மேலும் கடிதத்தின் இறுதியில் மிகப்பெரிய எச்சரிக்கையாக, Don't get greedy because pigs get fat and hogs get slaughtered" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பார்சலில் அனுப்பியவர் பெயர் “மார்கஸ் அக்ரிப்பா” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது, இது ஓவன்ஸின் AI கருவியின் பெயரை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாமக நலன் முக்கியமில்லையா? அன்புமணி, ராமதாஸ் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவு
ஓவன்ஸ் இதை “தி காட்ஃபாதர்” திரைப்படத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்ட செயல் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டாலும், இதை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், ஆனால் நேரடி அச்சுறுத்தலாக உணரவில்லை என்றும் தெரிவித்தார். இவர், AI பயத்தால் இந்தச் செயல் நிகழ்ந்திருக்கலாம் என்றும், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது மக்களுக்கு பயனளிக்கும் என்றும் கூறினார். “மாற்றத்தை எதிர்க்காமல் ஏற்றுக்கொண்டால், அதிக மதிப்பை உருவாக்கலாம்” என்று அவர் வலியுறுத்தினார்.

லாஸ் வேகாஸ் மெட்ரோபொலிட்டன் காவல்துறை இச்சம்பவத்தை விசாரித்து வருகிறது, ஆனால் அனுப்பியவர் இன்னும் கண்டறியப்படவில்லை. ஓவன்ஸ், அனுப்பியவரை தண்டிக்க விரும்பவில்லை என்றும், அவருக்கு AI குறித்து கற்பிக்க தயார் என்றும் கூறியுள்ளார். இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி சிலரிடையே எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. சிலர், ஏஐ மனிதர்களின் வேலைவாய்ப்பை கேள்விக்குள்ளாக்கும் என்று நம்புவதால், இந்த மாதிரியான அச்சுறுத்தல்கள் தோன்றுகின்றன. இது போன்ற தாக்குதல் நிகழ்வுகள், ஏஐ வளர்ச்சிக்கு எதிரான ஒரு தீவிர மனநிலை சில சமூகங்களில் உருவாகியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்காவின் 20 ஆண்டு கால உறவு பாதிக்கப்படும்!! ட்ரம்புக்கு உள்நாட்டிலேயே கிளம்பும் எதிர்ப்பு!!